Published:Updated:

`வெள்ளம் வந்தால் இனி கவலைப்பட வேண்டாம்!' - மிதக்கும் வீடுகளை உருவாக்கிய ஜப்பான் நிறுவனம்

மிதக்கும் வீடுகள்

ஜப்பானிலுள்ள வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான `Ichijo Komuten' நிறுவனம், வெள்ளம் ஏற்பட்டால் மிதிக்கும் வகையிலான வீடு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது!

`வெள்ளம் வந்தால் இனி கவலைப்பட வேண்டாம்!' - மிதக்கும் வீடுகளை உருவாக்கிய ஜப்பான் நிறுவனம்

ஜப்பானிலுள்ள வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான `Ichijo Komuten' நிறுவனம், வெள்ளம் ஏற்பட்டால் மிதிக்கும் வகையிலான வீடு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது!

Published:Updated:
மிதக்கும் வீடுகள்

ஜப்பான் நாட்டில் வெள்ளம், நிலநடுக்கம் என அடுத்தடுத்து ஏதாவது ஒரு பாதிப்பு வந்துகொண்டே இருக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், பெருந்துயர்களைச் சந்தித்தது ஜப்பான். இந்த நிலையில், ஜப்பானிலுள்ள வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான `Ichijo Komuten' நிறுவனம், வெள்ளம் ஏற்பட்டால் மிதிக்கும் வகையிலான வீடு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த வகை மிதக்கும் வீடுகள், நீர்புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால், மக்கள் வீடுகளையும், பொருள்களையும் இழந்து நிற்பதைத் தடுக்கும் வகையில் இந்த வீடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மிதக்கும் வீடுகளைத் தயாரிக்கும் பணியில் Ichijo Komuten நிறுவனம் ஈடுபட்டுவந்தாலும், கடந்த வாரம் இது குறித்த வீடியோ ஜப்பானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, இந்த மிதக்கும் வீடுகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகின்றன.

மிதக்கும் வீடு
மிதக்கும் வீடு

மிதக்கும் வீடுகளைத் தயாரித்த நிறுவனத்தினர், ``இந்த மிதக்கும் வீடுகள் பார்க்க சாதாரண வீடுகளைப் போலத்தான் இருக்கும். தடிமனான இரும்பு கம்பிகளால் இந்த வகை வீடுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தரையுடன் தடிமனான கேபிள்கள் மூலம் வீடுகள் இணைக்கப்படும். வெள்ளம் ஏற்படும்போது இந்தக் கேபிள்கள் வீட்டை மேலே தூக்கிவிடும். தண்ணீர் வடிந்த பிறகு, மீண்டும் தரையுடன் வீடு இணைந்துவிடும். 15 அடி உயர வெள்ளத்திலும் இந்த வீடு மிதக்கும். மின்சார பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, மின்கம்பிகள் அனைத்தும் மேல்நோக்கி பொருத்தப்பட்டிருக்கின்றன'' என்று தெரிவித்திருக்கிறது. விரைவில் இந்த வகை வீடுகள் ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!