Published:Updated:

`ஷிபாசாகுரா மலர்களும்... குரோகியின் காதலும்!' - மனைவிக்காக ஜப்பான் முதியவர் அமைத்த நந்தவனம்

ராம் பிரசாத்

சுற்றுலாப் பயணிகள், ஷிபாசாகுரா மலர்களுக்கு இடையே புன்னகைத்த வாறே செல்வதை குரோசி தனது மனைவியுடன் ரசித்துக்கொண்டிருக்கிறார்.

 குரோசி
குரோசி

''அவளுக்கு, இந்த உலகம் முழுவதையும் என்னால் சுற்றிக் காண்பிக்க முடியாது. அதனால்தான், இந்த உலகத்தை அவள் காலடிக்குக் கொண்டுவந்துவிட முடிவுசெய்தேன்.'' 60 வயதைத் தாண்டிய குரோகியின் காதல் வார்த்தைகள் இவை. கண் பார்வையிழந்த தனது மனைவிக்காகப் பெரிய பூந்தோட்டத்தை அமைந்துள்ளார் இவர்.

பூந்தோட்டம்
பூந்தோட்டம்

ஜப்பானைச் சேர்ந்தவர் குரோகி. 1956-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஜப்பான் முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும் என முடிவுசெய்து, அதற்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குரோகியின் மனைவிக்கு கண் பார்வை பறிபோனது. பார்வை திடீரென பாதிக்கப்பட்டதால், வீட்டை விட்டு அவர் வெளியே வர விரும்பவில்லை. நாள் முழுவதும் வீட்டினுள்ளே இருந்துவந்துள்ளார்.

தனது மனைவி இப்படி வீட்டினுள்ளே முடங்கி இருப்பதை குரோக்கியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை உற்சாகமூட்ட ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியுள்ளது. சாலையில் செல்பவர்கள், அவரது தோட்டத்தில் இருந்த இளஞ்சிவப்பு ஷிபாசாகுரா மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசிப்பதையும் சிலர் அதை விரும்பி பறித்துச்செல்வதையும் பார்த்துள்ளார்.

பூந்தோட்டம்
பூந்தோட்டம்

தன் மனைவியை இந்த உலகம் முழுவதையும் என்னால் சுற்றிக் காண்பிக்க முடியாது. அதனால்தான், இந்த உலகத்தை அவரது காலடிக்குக் கொண்டு வர முடிவுசெய்துள்ளார். தனது தோட்டத்தில் அதிகப்படியான செடிகளை வளர்த்தால், இந்தப் பூக்களை ரசிக்க ஏராளமான நபர்கள் வந்துசெல்வார்கள் என எண்ணியுள்ளார். அவருக்குத் தெரியும், தனது மனைவியால் பார்க்க முடியாது என்று. ஆனால், அதன் வாசனையை அவரால் உணரமுடியும். அந்தச் சூழல் அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என நம்பினார்.

இதற்காக, இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான செடிகளை வளர்த்துள்ளார். அவருடைய எண்ணப்படியே, தோட்டம் முழுவதும் இளஞ்சிவப்பு ஷிபாசாகுரா மலர்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்தது. அவரது மனைவியின் முகத்திலும் பழைய சந்தோஷம் குடிகொள்ள ஆரம்பித்தது.

ஷிபாசாகுரா மலர்கள்
ஷிபாசாகுரா மலர்கள்

குரோகியின் நந்தவனம் சுற்றுலாப் பயணிகளைக் கவரத் தொடங்கியது. தனது மனைவிக்காக பூந்தோட்டம் அமைக்க ஆரம்பித்தவர், மிகப்பெரிய நந்தவனத்தையே உருவாக்கிவிட்டார். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஷிபாசாகுரா மலர்களுக்கு இடையே புன்னகையித்தவாறே செல்வதை குரோசி தனது மனைவியுடன் ரசித்துக்கொண்டிருக்கிறார். மார்ச் , ஏப்ரல் மாதங்களில் ஷிபாசாகுர மலர்கள் பூத்துக்குலுங்குவதாகவும் அந்தக் காலகட்டத்தில் ஒருநாளைக்கு 1,000 பேர் இவரது தோட்டத்தை வந்து பார்த்துச்செல்வதாகவும் கூறப்படுகிறது.