Published:Updated:

``என்னை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்...” - தன்னைத் தானே வாடகைக்குவிட்ட ஜப்பான் இளைஞர்

தன்னைத் தானே வாடகைக்கு விட்ட நபர்

ஜப்பான் தலைநகர், டோக்கியோவைச் சேர்ந்த ஓர் இளைஞர் தன்னைத் தானே வாடகைக்குவிட்ட சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜப்பான் தலைநகர், டோக்கியோவைச் சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ (39). கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். அந்த நிறுவனங்களில் ஏற்பட்ட சங்கடம் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டில் எவ்வித முதலீடும் இல்லாமல் புதிய தொழிலைத் தொடங்கினார். இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ``கடைக்குச் செல்வதற்கு ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை, எளிதான வேலைகளுக்கு ஆள் தேவை என்றால் என்னை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கடினமான வேலைகளைச் செய்ய மாட்டேன்” எனப் பதிவிட்டார்.

``என்னை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்...” - தன்னைத் தானே வாடகைக்குவிட்ட ஜப்பான் இளைஞர்

இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட பொதுமக்களில் பலர், ஷோஜி மோரிமோட்டாவை வாடகைக்கு முன்பதிவு செய்தனர். முதலில் குறைவான தொகையை வசூலித்த அவர், தற்போது ஒரு கோரிக்கைக்கு 69 பவுண்டுகள் (ரூ. 6,641) வசூலிக்கிறார் எனக் கூறப்படுகிறது. பாலியல்ரீதியாகவோ, வீடுகளைச் சுத்தம் செய்யவும், துணி துவைக்கவும், கடினமான வேலைக்கு அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.