Published:Updated:

வெள்ளை மாளிகையில் பேத்தி திருமணம்; தொகுப்பாளராகும் ஜோ பைடன்; களைகட்டும் ஏற்பாடுகள்!

ஜோ பைடன், ஜில் பைடன்

28 வயதான நவோமி பைடன், வாஷிங்டனில் வழக்கறிஞராக உள்ளார், இவர் ஹன்டர் பைடன் மற்றும் கேத்தலின் பூலேவுக்குப் பிறந்தவர். இவர்கள் இருவரும் 2017-ல் விவாகரத்து பெற்றனர். 24 வயதான பீட்டர் நீல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பின் இறுதி செமஸ்டரில் உள்ளார்.

வெள்ளை மாளிகையில் பேத்தி திருமணம்; தொகுப்பாளராகும் ஜோ பைடன்; களைகட்டும் ஏற்பாடுகள்!

28 வயதான நவோமி பைடன், வாஷிங்டனில் வழக்கறிஞராக உள்ளார், இவர் ஹன்டர் பைடன் மற்றும் கேத்தலின் பூலேவுக்குப் பிறந்தவர். இவர்கள் இருவரும் 2017-ல் விவாகரத்து பெற்றனர். 24 வயதான பீட்டர் நீல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பின் இறுதி செமஸ்டரில் உள்ளார்.

Published:Updated:
ஜோ பைடன், ஜில் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அந்நாட்டின் முதல் பெண்மணியான ஜில் பைடனும் வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கும் தங்கள் மூத்த பேத்தி நவோமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் திட்டமிட்டுள்ளனர் .

Biden
Biden
Manuel Balce Ceneta

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனாதிபதி குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி இல்லத்தில் இதுவரை நான்கு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நவோமி பைடன், வெள்ளை மாளிகையில் தனது திருமணத்தைக் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

28 வயதான நவோமி பைடன், வாஷிங்டனில் வழக்கறிஞராக உள்ளார், இவர் ஹன்டர் பைடன் மற்றும் கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். இவர்கள் இருவரும் 2017-ல் விவாகரத்து பெற்றனர். 24 வயதான பீட்டர் நீல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பின் இறுதி செமஸ்டரில் உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் சந்தித்துக்கொண்ட நவோமி பைடனும், நீலும் நண்பர்களாக இருந்து, காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துள்ளனர்.

நீலுடன் நவோமி
நீலுடன் நவோமி
Twitter Photo

இது குறித்து நவோமி பைடன் திங்கள்கிழமை மதியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``வெள்ளை மாளிகையில் தங்கள் திருமணத்தைக் கொண்டாடும் வாய்ப்பு அளித்ததற்காகத் தன் தாத்தா மற்றும் பாட்டிக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனப் பதிவிட்டுள்ளார். பைடனின் தகவல் தொடர்பு இயக்குநரான எலிஸபெத் அலெக்ஸாண்டர், இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 19 அன்று நடைபெறும் என மின்னஞ்சலில் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism