Published:Updated:

அமெரிக்கா: `துணை அதிபர் பதவி; போட்டியிடும் கமலா ஹாரிஸ்!’ - வரலாறு படைத்த பிடென்

பிடன் - ஹாரிஸ்
பிடன் - ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அமெரிக்க ஆப்பிரிக்கரான கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதே தேர்தலில் அந்நாட்டின் துணை அதிபருக்கான தேர்வும் நடக்கவிருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸும் போட்டியிடவிருக்கிறார்கள். அதேபோல் ஜனநாயகக் கட்சியில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் (Joe Biden) போட்டியிடவிருக்கிறார்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

இந்நிலையில் அக்கட்சியின் துணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என ஜோ பிடென் அறிவித்துள்ளார். ஒரு பெரும் கட்சியின் ஜனாபதி டிக்கெட்டில் போட்டியிடும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து வரலாறு படைத்துள்ளார் பிடென். ``இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெருமை மற்றும் கொண்டாட்டமான தருணம். அச்சமில்லாத போராளியாகவும், நாட்டின் தலைசிறந்த அரசு ஊழியராகவும் கமலா ஹாரிஸ் இருக்கிறார்’’ என்று பிடென் கூறியிருக்கிறார்.

`200 ஆண்டுக்கால பிரச்னை, ட்ரம்புடன் முடியாது!' -ஜார்ஜின் மரணம் குறித்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்

55 வயதான கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்; தாய் இந்தியர். தற்போது கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க செனட்டராக இருக்கிறார். மேலும் இவர், `கலிஃபோர்னியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்', `அமெரிக்க செனட் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்’ என்ற பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.

பிடன் - ஹாரிஸ்
பிடன் - ஹாரிஸ்

``ஜோ பிடெனால் அமெரிக்க மக்களை ஒன்றிணைக்க முடியும். ஏனென்றால், அவர் தனது வாழ்க்கை முழுவதும் நமக்காகப் போராடினார். அதிபராக அவர் நம் கொள்கைகளுக்கு ஏற்ப வாழும் ஓர் அமெரிக்காவை உருவாக்குவார்” என்று கமலா ஹாரிஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு அடுத்த 2024, 2028 தேர்தல்களில் அதிபர் பதவிக்குப் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`ஜோ பிடன் வெற்றி பெறுவதே சீனாவின் பெரும் ஆசை!’ - எதிர்க்கட்சிகளையும் சேர்த்து விமர்சிக்கும் ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு