Published:Updated:

``அமெரிக்கர்களே... உக்ரைனைவிட்டு வெளியேறுங்கள்!" - அறைகூவல் விடுத்த அதிபர் ஜோ பைடன்!

ஜோ பைடன் ( Evan Vucci )

``உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவப் படை அச்சுறுத்தல் காரணமாக, முக்கிய தூதரகப் பணியாளர்களைத் தவிர, அனைத்து அமெரிக்கர்களும் உக்ரைனிலிருந்து வெளியேறிவிடுங்கள்’’ என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

``அமெரிக்கர்களே... உக்ரைனைவிட்டு வெளியேறுங்கள்!" - அறைகூவல் விடுத்த அதிபர் ஜோ பைடன்!

``உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவப் படை அச்சுறுத்தல் காரணமாக, முக்கிய தூதரகப் பணியாளர்களைத் தவிர, அனைத்து அமெரிக்கர்களும் உக்ரைனிலிருந்து வெளியேறிவிடுங்கள்’’ என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Published:Updated:
ஜோ பைடன் ( Evan Vucci )

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனை அச்சுறுத்தும்விதமாக ஆயுதங்களுடன்கூடிய ஒரு லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பல நாள்களாகவே உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இது குறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா, ரஷ்யாவைக் கடுமையாக எச்சரித்தும்வருகிறது. அண்மையில்கூட அமெரிக்கா, `உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும்’ என்று ரஷ்யாவை மறைமுகமாக எச்சரித்தது.

உக்ரைன் கொடி
உக்ரைன் கொடி
Twitter/@PromoteUkraine

இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ஜோ பைடன், "ரஷ்யாவின் ராணுவ அச்சுறுத்தல் காரணமாக, முக்கியத் தூதரக பணியாளர்களைத் தவிர, மற்ற அனைத்து அமெரிக்கர்களும் உக்ரைனிலிருந்து வெளியேறிவிடுங்கள். அதுதான் ராஜதந்திரமும்கூட" என ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism