Published:Updated:

``உக்ரைன் மீதான தாக்குதலுக்காக ரஷ்யாவை உலகம் பொறுப்பு கூறவைக்கும்"- ஜோ பைடன் கண்டனம்!

ஜோ பைடன்

"புதின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலுக்காக ரஷ்யாவை உலகம் பொறுப்பு கூறவைக்கும்" என அமரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்னையால் பல நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், திடீரென ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதலை தொடங்க உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யப் படைகள், உக்ரைனில் போரைத் தொடங்கி, கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களைத் தாக்கிவருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபரின் போர் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை விடுத்துள்ளார்.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

அதில், `அதிபர் புதின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தொடங்கியுள்ளார். இது நிச்சயம் பேரழிவுகளை உண்டாக்கும். இதனால் ஏற்படும் மரணங்களுக்கும், அழிவுக்கும் ரஷ்யாதான் பொறுப்பு. இதற்கு அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் நிச்சயம் ஒன்றுபட்ட வழியில் தக்க பதிலளிக்கும். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உலகம் ரஷ்யாவைப் பொறுப்பு கூறவைக்கும்" என ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல பகுதிகளில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism