Published:Updated:

உக்ரைன் போர்: ``உயிருக்குப் போராடும் நிலையிலும் இனவெறி..!" - பத்திரிகையாளர் அதிர்ச்சி ட்வீட்

உக்ரைன்

பத்திரிகையாளர் பிஜான் ஹொசைனி என்பவர் உக்ரைனிலிருந்து தன் சகோதரி தப்பிச் செல்லும்போது போலந்து எல்லையில் இனவெறியைச் சந்தித்தாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உக்ரைன் போர்: ``உயிருக்குப் போராடும் நிலையிலும் இனவெறி..!" - பத்திரிகையாளர் அதிர்ச்சி ட்வீட்

பத்திரிகையாளர் பிஜான் ஹொசைனி என்பவர் உக்ரைனிலிருந்து தன் சகோதரி தப்பிச் செல்லும்போது போலந்து எல்லையில் இனவெறியைச் சந்தித்தாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Published:Updated:
உக்ரைன்

கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவால் உக்ரைனில் தொடங்கிய போர், ஆறு நாள்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களை ரஷ்யப் படையினர் நடத்திவருகின்றனர். இந்தப் போரால் இதுவரை 5 லட்சம் உக்ரேனியர்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளதாகத் தகவல்களும் வெளியாகின. இவ்வாறு உக்ரைனில் மக்கள் உயிருக்குப் போராடிவரும் நிலையில், பத்திரிகையாளர் பிஜான் ஹொசைனி என்பவர் உக்ரைனிலிருந்து தன் சகோதரி தப்பிச் செல்லும்போது போலந்து எல்லையில் இனவெறியைச் சந்தித்தாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உக்ரைன்
உக்ரைன்

அந்த பதிவில் அவர், ``போரால் என் சகோதரி உக்ரைனில் சிக்கிக்கொண்டார். அவர் தன் நண்பர்களுடன் வெளியேற முயன்றபோது, கீவ்-விலிருந்து போலந்தின் எல்லைக்கு அருகில் உள்ள லிவ் நகருக்குச் செல்லும் கார்கள் அனைத்தும் நின்றுவிட்டன. பின்னர் ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு உக்ரைனின் டினிப்ரோ நகருக்குச் செல்லலாம் என்று ஒரு டிரைவரைக் கண்டுபிடித்து ஒருவழியாக போலந்து எல்லைக்கு வந்துவிட்டனர். ஆனால், அவர்கள் எல்லைக்கு வந்தபோது போலந்து நாட்டினர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கு இரண்டு கோடுகள் அமைக்கப்பட்டன. ஒன்று வெள்ளையர்களுக்கு, மற்றொன்று கறுப்பினத்தவர்களுக்கு. கடுங்குளிரில் அவர்கள் நிறவெறியால் பாரபட்சமாக நடத்தப்பட்டனர்" என்று பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism