Published:Updated:

'இது சிறைத் திருமணம் அல்ல, அன்பின் பிரகடனம்'; சிறையில் திருமணம் செய்துகொண்ட ஜூலியன் அசாஞ்சே

திருமணத்தின் புகைப்படம்

பிரபல விக்கிலீக்ஸ் பத்திரிகையின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே என்பவர் தனது வழக்கறிஞர் மற்றும் நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை சிறையில் கைதிகள் பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.

'இது சிறைத் திருமணம் அல்ல, அன்பின் பிரகடனம்'; சிறையில் திருமணம் செய்துகொண்ட ஜூலியன் அசாஞ்சே

பிரபல விக்கிலீக்ஸ் பத்திரிகையின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே என்பவர் தனது வழக்கறிஞர் மற்றும் நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை சிறையில் கைதிகள் பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.

Published:Updated:
திருமணத்தின் புகைப்படம்

முக்கியமான ஆவணங்களையும் செய்திகளையும் பாதுகாத்து வெளியிடும் ஆஸ்திரேலியாவின் பத்திரிகையான விக்கிலீக்ஸ்(Wikileaks) என்ற பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே என்பவர் தனது வழக்கறிஞர் மற்றும் நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு சிறைத்துறை அனுமதி மறுத்ததால் சிறையில் கைதிகள் பார்க்கும் நேரத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தின் புகைப்படம்
திருமணத்தின் புகைப்படம்

50 வயதான ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது இவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மோரிஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக இவரது விடுதலைக்காக போராடிவருபவர். 2015 ஆம் ஆண்டு முதல் நீண்ட நாள் காதலித்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது ஜூலியன் அசாஞ்சே தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையான பெல்மார்ஷ் சிறைச்சாலையில் உள்ளார். இவர்களின் திருமணத்திற்கு அனுமதி வழங்காததால் இவர்கள் இருவரின் திருமணம் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்சிகளாக ஆஜராக பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது சிறைத்துறை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றிக் கூறிய ஸ்டெல்லா மோரிஸ், 'அவரது திருமண நாளில் கூட, அவர் பொதுமக்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்' என்றும் 'இதில் அவர்களின் அச்சம் வெளிப்படுத்துகிறது' என்றும் கூறினார்.

மேலும் 'இது சிறைத் திருமணம் அல்ல சிறைச் சுவர்களை மீறி, அரசியல் அடக்குமுறைகளை மீறி, தன்னிச்சையான தடுப்புக்காவலில் ஜூலியனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட தீங்கிலும் துன்புறுத்தலும் நடந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியின் அறிவிப்பு' என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism