Published:Updated:

கவர்ச்சி உடையணிந்து ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற கமலா ஹாரிஸின் மகள்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

எல்லா எம்ஹாஃப், கமலா ஹாரிஸ்

சர்ச்சையைக் கிளப்பிய எல்லா எம்ஹாஃபின் ஃபேஷன் உடை. இவர் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருடைய முதல் தாரத்தின் மகளாவார். அந்த ஃபேஷன் உடை தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றவர் கமலா ஹாரிஸ். அமெரிக்கத் துணை அதிபராகப் பதிவு ஏற்கும் முதல் ஆசிய - அமெரிக்க வம்சாவளியினர் என்ற பெருமையையும் பெற்றவர். இவரது கணவரின் முதல் திருமணத்தின் வழியாகப் பிறந்த குழந்தைகள்தான் கோல் எம்ஹாஃப் மற்றும் எல்லா எம்ஹாஃப் (Step Daughter).

23 வயதாகவும் எல்லா எம்ஹாஃப், ஃபேஷன் மற்றும் மாடலிங்கில் அதிக ஆர்வம் உள்ளவர். மாடலிங் நிகழ்ச்சிகளில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் எல்லா எம்ஹாஃப், சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற 'New York Fashion Week Show' என்ற ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டார்.

எல்லா எம்ஹாஃப்
எல்லா எம்ஹாஃப்

இதில் டிஸைனர்ஸ் கேட்வாக்கில் நடந்த எல்லா எம்ஹாஃப், கவர்ச்சியான உடை அணிந்து, மேலாடைக்குப் பதிலாகப் பச்சை நிற ஸ்கார்ஃப் டாப் மட்டுமே அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக இந்த வகையான ஃபேஷன் ஷோக்களில் கவனம் ஈர்க்கும் வகையிலோ, புதுமையான முறையிலோ உடை அணிவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் எல்லா எம்ஹாஃப், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் மகள் என்பதால் நெட்டிசன்கள் இதை வைரல் செய்து விமர்சித்து வருகின்றனர்.