Published:Updated:

``ராணி எலிசபெத் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான்!"- கமல்ஹாசன் உருக்கம்

எலிசபெத் ராணி, கமல்ஹாசன்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

``ராணி எலிசபெத் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான்!"- கமல்ஹாசன் உருக்கம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
எலிசபெத் ராணி, கமல்ஹாசன்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சையளித்து வந்தனர்.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார். இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போன்ற பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். அந்தவகையில் தற்போது கமல்ஹாசனும் தனது ட்விட்டரில் ராணி எலிசபெத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், "எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாகத் திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது,

அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார் என்று கமல் அப்பதிவில் குறிப்பிட்டிருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான் என்றும் தெரிவித்திருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது" என்று எலிசபெத்துடனான தனது சந்திப்பை பற்றி பகிர்ந்துள்ளார். தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.