Published:Updated:

``தெரியாமல் செய்த கொலைக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்கணும்?" - மனைவி உடலை சூட்கேஸில் அடைத்த கணவன்

கொலை - கைது

வீட்டுக்குப் பின்புறம் உள்ள புதரில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸ் கிடைத்திருக்கிறது. அதில் டான் வாக்கரின் அழுகிய உடல் கிடைத்திருக்கிறது.

``தெரியாமல் செய்த கொலைக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்கணும்?" - மனைவி உடலை சூட்கேஸில் அடைத்த கணவன்

வீட்டுக்குப் பின்புறம் உள்ள புதரில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸ் கிடைத்திருக்கிறது. அதில் டான் வாக்கரின் அழுகிய உடல் கிடைத்திருக்கிறது.

Published:Updated:
கொலை - கைது

பிரிட்டனைச் சேர்ந்த 46 வயதான தாமஸ் நாட் என்பவர், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 27-ம் தேதி, டான் வாக்கர் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றபோது தன் மனைவியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை இந்த வழக்கைப் பதிவுசெய்து விசாரித்துவந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமஸ் நாட் வீட்டுக்குப் பின்புறம் உள்ள புதரில், புதைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸ் கிடைத்திருக்கிறது. அதில் டான் வாக்கரின் அழுகிய உடல் கிடைத்திருக்கிறது.

சூட்கேஸ் (மாதிரி படம்)
சூட்கேஸ் (மாதிரி படம்)
pixabay

அந்த உடலை எடுத்து பிரேத பரிசோதனை நடத்தியதில், அவர் கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதியானது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரித்ததில். திருமணத்தன்று டான் வாக்கரை இறுதியாகப் பார்த்தவர், திருமணத் தம்பதியை வீட்டில் இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் மட்டுமே. அதன் பிறகு யாரும் அவரைப் பார்க்கவில்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, காவல்துறை தாமஸ் நாட்-டிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. விசாரணையில் தாமஸ் நாட் பல திடுக்கிடும் தகவல்களை அளித்திருக்கிறார்.

பிரிட்டன்
பிரிட்டன்

விசாரணையில், "திருமணமான அன்று இரவு எனக்கும் என் மனைவிக்கும் வாக்குவாதம் நடந்தது. அதில் நான் அவளை அடித்தேன். அவள் இறந்துவிட்டாள். ஆனால், அதை வேண்டுமென்றே செய்யவில்லை. தெரியாமல் செய்த கொலைக்கு ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்... அதனால் அவளை ஒரு சூட்கேஸில் வைத்து புதர் அருகில் புதைத்துவிட்டேன். உறவினர்கள் எல்லோரிடமும் நாங்கள் ஹனிமூன் செல்வதாகக் கூறி நம்பவைத்தேன். அதன் பிறகுதான் ஹனிமூன் சென்ற இடத்தில் அவள் தொலைந்துவிட்டதாகப் புகாரளித்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாமஸ் நாட்-டுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.