Published:Updated:

`உர ஆலை நிகழ்வில் பங்கேற்றாரா கிம் ஜாங் உன்..?’ - புதிது புதிதாய்க் கிளம்பும் வதந்தி

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வடகொரியாவில் கிம் வாரிசுகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பல வல்லரசு நாடுகள் கழுகுப் பார்வையுடன் சரியான நேரத்திற்குக் காத்திருக்கின்றன.

கிம் ஜாங் உன்… வடகொரியா எனும் மர்மதேசத்தின் சக்கரவர்த்தி. கருத்து அரசியல் சுதந்திரம் இல்லாத வடகொரியாவில் சர்வாதிகாரியான கிம் வைத்ததே சட்டம். கொரிய தொழிலாளர் கட்சியின் சாம்ராஜ்யம் அங்கு கொடிக்கட்டி பறக்கிறது. இன்று நேற்றல்ல, கடந்த 70 ஆண்டுகளாக வடகொரியாவில் கோலோச்சுகிறது கொரிய தொழிலாளர் கட்சி.

கிம் ஜாங் உன் தனது முன்னோர்கள் வழியில் சர்வாதிகார ஆட்சியைக் கச்சிதமாக நடத்தி வருகிறார். கொரோனா காலத்திலும் இந்த வடகொரிய சர்வாதிகாரி குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. உலக அரசியல் வரலாறு ஒரு புதிய அத்தியாயத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வடகொரியாவில் கிம் வாரிசுகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பல வல்லரசு நாடுகள் கழுகுப் பார்வையுடன் சரியான நேரத்திற்குக் காத்திருக்கின்றன. அதற்கு சிக்னல் கொடுக்கும்விதமாக கிம் ஜாங் உன் திடீரென மாயமான செய்தி உலகநாடுகளின் செவிகளுக்கு எட்டியது. உலகநாடுகளின் கவனம் வடகொரியா எனும் மர்மதேசத்தின் மீது விழுந்தது.

வடகொரியாவின் ஒவ்வொரு அசைவையும் சேட்டிலைட்கள் மூலம் கண்காணிக்கத் தொடங்கின உலக நாடுகள். கிம் ஜாங் உன் இதயத்தில் ஏதோ பிரச்னை அதற்காக ஆபரேஷன் செய்துகொண்டார். ஆனால் அதன்பின்னர் கோமாவுக்குத் திரும்பிவிட்டார் என்ற தகவல்கள் காற்றில் கசிந்தன.

`வடகொரியாவின் ஃபர்ஸ்ட் ஃபீமேல் டிக்டேட்டர்’ – உலகமே எதிர்நோக்கி இருக்கும் கிம் யோ ஜாங் யார்?

ஏப்ரல் 11-ம் தேதிக்குப் பின்னர் கிம் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. வடகொரியாவை உருவாக்கியவரும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங் பிறந்தநாள் விழா ஏப்ரல் 15-ம் தேதி நடந்தது. இதில் அவர் கலந்து கொள்ளவில்லை. கிம் மரணம் என்ற செய்தி மெல்ல பரவத் தொடங்கியது. கண்ணாடிப் பேழையில் கிம் உடல் இருப்பது போன்ற புகைப்படம் ஜப்பான் ஊடகத்தில் வெளியானது. ஆனால் அது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம், 2011-ல் அவரது அப்பா இறந்தபோது எடுத்த படத்தை மார்ஃபிங் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

கிம் போனால் அந்த அரியணை யாருக்கு என்ற பேச்சுகள் எல்லாம் எழத்தொடங்கின. சந்தேகமே வேண்டாம் வடகொரிய அரியணையை அலங்கரிக்கப்போகிறவர் அவரது சகோதரி கிம்-யோ-ஜாங் தான் என அடித்துச் சொன்னார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள். கிம்-யோ-ஜாங்கை தேடத் தொடங்கியது ஒரு கூட்டம்.

`என்னடா அங்க சத்தம்’ என்ற தொனியில் மூன்று வாரங்களுக்குப் பின் தலையைக் காட்டினார் கிம். `வந்துட்டாண்டா என் தலைவன்’ என்ற ரீதியிலான மீம்ஸ்கள் இணையத்தில் வட்டமடித்தன. நீங்க நினைக்கிற மாதிரி கிம் ஒரு மீம் கன்டென்ட் இல்ல; கிம் ஒரு மிஸ்ட்ரியான கன்டென்ட். உர ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் கிம் ஜாங் உன் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டது வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.

`கிம் ஜாங் உன்னின் கம்பீரம்.. அக்மார்க் ஸ்மைல் ஆகியவை அந்த வீடியோவில் மிஸ்ஸிங்' எனச் சில பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் உர ஆலை திறப்புவிழாவில் கலந்துகொண்டது கிம் ஜாங் உன் இல்லை; அவரது போலி என்று சிலர் கூறுகிறார்கள். அவரது முந்தைய படங்களையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அது தெரியும் என்கிறார்கள்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

அவரது முகத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. அகன்ற நெற்றி, புருவம், பல் வரிசை எனப் பல்வேறு வேறுபாடுகளைக் கூறுகின்றனர். இதன் காரணமாக மீண்டும் கிம் தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளன. மூளைச்சாவு ஏற்பட்டு கிம் ஜாங் உன் இறந்திருக்க வேண்டும் தற்போதைய அரசியல் சூழலைச் சமாளிப்பதற்கு அவரது போலியை மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளனர் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

`தொழிற்சாலை திறப்பு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!’ - பொதுவெளியில்  தோன்றினார் கிம் ஜாங் உன்

ஹேர்ஸ்டைல் எல்லாம் அவரது ஹேர்டிசைனரின் வேலையாக இருக்கலாம். பல் மருத்துவத்தில் இப்போது இருக்கும் அதிநவீன டெக்னாலஜி மூலம் பற்களை சரிசெய்து கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாததால் அவரது முகத்தில் களைப்பு இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

`உர ஆலை நிகழ்வில் பங்கேற்றது கிம் ஜாங் உன்னின் போலியாகக் கூட இருக்கலாம். ஆனால் கிம் இன்னும் இறக்கவில்லை.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்பதற்காகக் கூட இப்படி செய்திருக்கலாம் என்கின்றனர்.

சீன ஊடகவியலாளர் Shijian Xingzou மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை கிம் இறந்துவிட்டார் என உறுதியாகக் கூறி வருகிறார். மர்மதேச சக்கரவர்த்தி குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் மர்மமாகவே இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு