Published:Updated:

`சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை’ - கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்குத் தென்கொரியா முற்றுப்புள்ளி

கிம் ஜாங் உன்
News
கிம் ஜாங் உன் ( AP )

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நலத்துடன் இருப்பதாக தென் கொரியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த மனிதக்குலத்தையும் கொரோனா ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகமே ஒரு தனி மனிதரை மிக தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறது. அணுகுண்டு, ஏவுகணை போன்ற தொடர் சோதனைகளை நடத்தி அமெரிக்காவையே அதிரவைத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்தான் அது. கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதில் தொடங்கி கிம்மின் சகோதரிதான் அடுத்த அதிபர் என்பது வரை பல்வேறு உறுதிப்படுத்தப்படாத செய்திகள் உலாவந்து கொண்டிருந்தன.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

வடகொரியாவில் நடக்கும் உண்மையை அறிந்துகொள்ள பல நாடுகளும் போராடின. குறிப்பாக தென் கொரியா. இந்த சர்ச்சை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் இதற்கு தென்கொரியாவே ஒரு முடிவையும் அறிவித்துவிட்டது. அதில், ‘வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமாக இருக்கிறார். எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது. நாங்கள் வடகொரியாவைக் கண்காணித்தவரை அங்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் கண்டறியப்படவில்லை’ என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே- இன்னின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் சி.என்.என் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இறுதியாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி மக்கள் முன் தோன்றினார் கிம். அதன் பிறகு எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி நடந்த கிம்மின் தாத்தா (வடகொரியாவை உருவாக்கியவர்) பிறந்தநாள் விழாவில் அதிபர் கலந்துகொள்ளவில்லை. இதுவே, அவர் உடல்நலம் தொடர்பான சந்தேகங்களை அதிகரிக்கச்செய்தது. கிம்மின் உடல்நிலை பற்றி உண்மையான தகவலை உறுதி செய்யப் பல தனியார் அமைப்பு, ஊடகங்கள் போன்ற அனைத்தும் கடுமையாக முயற்சி செய்தன.

சாட்டிலைட் புகைப்படம்
சாட்டிலைட் புகைப்படம்
AP

இந்த முயற்சிக்குப் பலனாக கிம் ஜாங் உன்னின் சொந்த ரயில் இருக்கும் இடத்தை சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்தது 38 நார்த் என்ற தனியார் நிறுவனம். அதன் படி கிம்மின் சொந்த ரயில் வட கொரியாவின் வோன்சோன் நகரத்தில் உள்ள கிம் குடும்பத்துக்குச் சொந்தமான ரெசார்ட்டுக்கு அருகில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த ரயில் கடந்த 23-ம் தேதி இங்கு வந்ததாகவும் அப்போது கிம்மும் அதில் பயணித்து ரெசார்ட்டில் தங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் கிம் உண்மையிலேயே அங்குதான் இருக்கிறார் என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கிம் ஜாங் உன் நேரில் வந்தால் மட்டுமே இந்த சர்ச்சைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.