Published:Updated:

ராணி எலிசபெத் மரணம்: இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இத்தனை சடங்குகள் இருக்கின்றனவா?!

மன்னர் சார்லஸ்

முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர்தான் அங்கு முடிசூட்டிக்கொண்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ், 40-வது மன்னர் ஆவார்.

ராணி எலிசபெத் மரணம்: இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இத்தனை சடங்குகள் இருக்கின்றனவா?!

முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர்தான் அங்கு முடிசூட்டிக்கொண்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ், 40-வது மன்னர் ஆவார்.

Published:Updated:
மன்னர் சார்லஸ்

1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் ஓய்வு எடுத்துவந்தார். இந்த நிலையில், தனது 96 வயதில் நேற்று காலமானார். இவரின் மரணம் இங்கிலாந்து மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராணி எலிசபெத்துக்குப் பிறகு அரச பதவியை 73 வயதான அவரின் மூத்த மகன் சார்லஸ் ஏற்கிறார்.

இங்கிலாந்தின் மன்னரான சார்லஸ் சில சடங்குகளைக் கடந்துதான் அரியணையில் ஏற முடியும். அதற்கான சம்பிரதாயங்களில் முதலாவது, அவருக்கான அடைமொழியைத் தேர்வு செய்வது. அதில் சார்லஸ்(Charles), பிலிப் (Philip), ஆர்தர் (Arthur), ஜார்ஜ் (George) என்ற நான்கு பெயர்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கலாம்.

மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்
மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்
ட்விட்டர்

மன்னர் சார்லஸின் மகன் இளவரசர் வில்லியம், அரியணைக்கு அடுத்த வாரிசாக இருந்தாலும், தானாகவே இளவரசராக மாற மாட்டார். அவர் தனது தந்தையின் மற்றொரு பட்டமான `டியூக் ஆஃப் கார்ன்வால்’ (Duke of Cornwall) என்ற பட்டத்தைப் பெறுவார். அவரின் மனைவி `கேத்தரின் கார்ன்வால் டச்சஸ்’ (Duchess of Cornwall) என்றும், மன்னர் சார்லஸின் மனைவி `ராணி கன்சார்ட்’ (Queen Consort) என்றும் அழைக்கப்படுவார். இவ்வாறான பெயர் மாற்றங்கள் முதலில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில், லண்டனிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் (St James's Palace in London), அக்சஷென் கவுன்சில் (Accession Council) எனப்படும் சடங்கு அமைப்புக்கு முன்னால் சார்லஸ் அதிகாரபூர்வ மன்னராக அறிவிக்கப்படுவார். இந்த அக்சஷென் கவுன்சிலில், கடந்தகால மற்றும் தற்போதைய மூத்த எம்.பி=க்கள், சில காமன்வெல்த் உயர் ஆணையர்கள் மற்றும் லண்டன் லார்டு மேயர் (Lord Mayor of London) ஆகியோர் இருப்பார்கள்.

மன்னராக அறிவிக்கும் இந்தச் சடங்கில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள், ஆனால் குறுகியகாலத்தில் இந்த அறிவிப்பு வெளியாவதால், இதில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். கடைசியாக 1952-ல் நடந்த அக்செஷன் கவுன்சிலில் சுமார் 200 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு, ராணி எலிசபெத்தின் மரணம் அக்செஷன் கவுன்சிலின் லார்டு பிரசிடென்ட்டால் அறிவிக்கப்பட்டு, ஒரு பிரகடனம் உரக்க வாசிக்கப்படும். அதில் முந்தைய மன்னரைப் பாராட்டி, புதிய அரசுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் வார்த்தைகள் வரிசையாக இருக்கும். அதன் பிறகு இந்த பிரகடனத்தில் பிரதம மந்திரி, கேன்டர்பரி பேராயர் (the Archbishop of Canterbury) மற்றும் லார்டு சான்சிலர் (the Lord Chancellor) உட்பட பல மூத்த பிரமுகர்கள் கையெழுத்திடுவர்.

மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ்
ட்விட்டர்

மன்னராக அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து அக்செஷன் கவுன்சில் மீண்டும் கூடும். அதில் மன்னரும் கலந்துகொள்வார். அதில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து தொடரும் ஒரு பாரம்பர்ய நடவடிக்கை இருக்கும். அதாவது புதிய மன்னரால் செய்யப்பட்ட ஒரு பிரகடனம் இருக்கும். அந்தப் பிரகடனத்தில் ஸ்காட்லாந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதாக மன்னர் உறுதிமொழி எடுப்பார். அதன் பிறகு சார்லஸைப் புதிய மன்னராக அறிவிக்கும் பொதுப் பிரகடனம் செய்யப்படும்.

மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ்
ட்விட்டர்

இது செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையிலுள்ள ஃப்ரைரி கோர்ட்டுக்கு மேலே உள்ள மேல்மாடத்திலிருந்து கார்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் என்று அழைக்கப்படும் அதிகாரியால் செய்யப்படும். ஹைட் பார்க், லண்டன் டவர் மற்றும் கடற்படைக் கப்பல்களிலிருந்து துப்பாக்கி முழக்கங்கள் நடைபெறும். மேலும் சார்லஸை மன்னராக அறிவிக்கும் பிரகடனம் எடின்பர்க் (Edinburgh), கார்டிஃப் (Cardiff), பெல்ஃபாஸ்ட் (Belfast) ஆகிய மொழிகளில் வாசிக்கப்படும். அதன் பிறகே முடிசூட்டுவிழா நடைபெறும்.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்
ட்விட்டர்

ராணி எலிசபெத் மரணமடைந்திருப்பதால், சார்லஸ் மன்னராகப் பதவியேற்றவுடனே முடிசூட்டுவிழா நடக்க வாய்ப்பில்லை. ராணி எலிசபெத் பிப்ரவரி 1952-ல் அரியணை ஏறினார், ஆனால் ஜூன் 1953 வரை அவருக்கும் முடிசூட்டப்படவில்லை. எனவே, மன்னர் சார்லஸுக்கும் முடிசூட்டுவிழா தாமதமாகலாம். முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர்தான் (William the Conqueror) அங்கு முடிசூட்டப்பட்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ் 40-வது மன்னர் ஆவார்.

மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ்
ட்விட்டர்

இந்த முடிசூட்டுவிழா கேன்டர்பரி பேராயரால் (Archbishop of Canterbury) மேற்கொள்ளப்படுகிறது. விழாவின் இறுதியில், அவர் சார்லஸின் தலையில் 2.23 கிலோ எடைகொண்ட செயின்ட் எட்வர்ட்டின் (St Edward) கிரீடத்தை வைப்பார். இது 1661-ம் ஆண்டிலிருந்து உள்ள ஒரு தங்கக் கிரீடம். இது லண்டன் கோபுரத்திலுள்ள மகுட நகைகளின் முக்கியப் பகுதியாகும். இது முடிசூட்டும் தருணத்தில் மன்னரால் மட்டுமே அணியப்படுகிறது. இந்த முடிசூட்டுவிழா ஓர் அரசு விழாவாகக் கருதப்படுகிறது. அதற்கு அரசே பணம் செலவழிக்கிறது. புதிய மன்னர் , மக்கள் முன் முடிசூட்டி உறுதிமொழியை எடுப்பார். இந்த விழாவில் அவர் மன்னரானதற்கான அடையாளமாக உருண்டை மற்றும் செங்கோலைப் கேன்டர்பரி பேராயர் வழங்குவார்.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்
ட்விட்டர்

அதன் பிறகு2.4 பில்லியன் மக்களைக்கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக சார்லஸ் பொறுப்பேற்பார். இவற்றில் 14 நாடுகளுக்கும், இங்கிலாந்துக்கும் மன்னராக அவர் கருதப்படுகிறார்.