Published:Updated:

`இந்தப் போர் விரைவில் முடிந்து...'-உக்ரைனுக்கு 83,500 டாலர் நன்கொடை தந்த நடிகையின் பிரார்த்தனை!

தென்கொரிய நடிகை Lee Young-Ae

"இந்தப் போர் விரைவில் முடிந்து உக்ரைனில் அமைதி திரும்பும் என்பதை நான் முழுமனதோடு நம்புகிறேன்." -தென்கொரிய நடிகை Lee Young-Ae

`இந்தப் போர் விரைவில் முடிந்து...'-உக்ரைனுக்கு 83,500 டாலர் நன்கொடை தந்த நடிகையின் பிரார்த்தனை!

"இந்தப் போர் விரைவில் முடிந்து உக்ரைனில் அமைதி திரும்பும் என்பதை நான் முழுமனதோடு நம்புகிறேன்." -தென்கொரிய நடிகை Lee Young-Ae

Published:Updated:
தென்கொரிய நடிகை Lee Young-Ae

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் போரில் பாதிக்கப்படுபவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவு குவிந்து வருகின்றன. தென்கொரிய நடிகை Lee Young-Ae, கொரிய பண மதிப்பில் 100 மில்லியன் வோன்களை (அமெரிக்க டாலர் மதிப்பில் 83,500 டாலர்களை) உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். Lee Young-Ae தென்கொரியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர். நன்கொடையோடு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "போர் வீரர்களைச் சேர்ந்த குடும்பத்தில் வந்ததால் போரின் கொடூரத்தை யாரை விடவும் அதிகமாக நான் அறிவேன். இந்தப் போர் விரைவில் முடிந்து உக்ரைனில் அமைதி திரும்பும் என்பதை நான் முழுமனதோடு நம்புகிறேன். உக்ரேனிய மக்கள் நன்றாகவும் பாதுகாப்பாகவும் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். அமைதியையும் சுதந்திரத்தையும் விரும்பும் உக்ரேனிய மக்கள் ஒருபோதும் நம்பிக்கையையும் தைரியத்தையும் கைவிடக்கூடாது. அமைதியை விரும்பும் சுதந்திர தென்கொரிய குடிமகளாக என்னுடைய சிறிய ஆனால் விலைமதிக்க முடியாத அன்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்."

அதனை உறுதிப்படுத்தியுள்ள தென்கொரிய நாட்டிற்கான உக்ரைன் தூதுவர் டிமிட்ரோ "பிரபல தென்கொரிய நடிகை Lee Young-Ae உக்ரைனுக்கு ஆதரவாக, விரைவில் போரை நிறுத்த கோரியுள்ள கடிதமும் மிகப்பெரிய பண உதவியும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் தருகின்றன. இந்த நன்கொடை பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்ற அனுப்பி வைக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism