Published:Updated:

`தீர்ப்பை மறு பரிசீலனை பண்ணுங்க!' - குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு

மலையரசு

பாகிஸ்தான் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி சர்வேதேச நீதிமன்றம் இந்தியாவுக்குச் சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவ்
குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தான் ராணுவத்தால், ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குல்பூஷன் ஜாதவ்
குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தை, இந்திய அரசு அணுகியது. இது தொடர்பான விசாரணையால், அவரது மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

இதன்பின் பல கட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "ஜாதவ்வின் தூக்குத்தண்டனை இடைநீக்கம் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் வியன்னா மாநாடு விதிகளை மீறியுள்ளது. பாகிஸ்தான் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" எனக் கூறி சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது.

Vikatan

மேலும் தூதரக உதவியை ஜாதவ் பெறலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜாதவை தூக்கிலிட முடியாது எனக் கூறப்படுகிறது.