Published:Updated:

`அதிபயங்கர தாக்குதல் நடக்கலாம்... நைஜீரியத் தலைநகரைவிட்டுக் கிளம்புங்கள்’ - எச்சரித்த அமெரிக்கா

நைஜீரியா ( Sunday Alamba )

வரலாற்றில் 1980-களில் ஆறு மில்லியன் மக்கள்தொகையுடன் மிகவும் பாதுகாப்பாக இருந்த இடம் அபுஜா. ஆனால், கடந்த ஆறு மாதங்களாகப் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், அவசரகாலப் பணியாளர்கள் தவிர்த்து மற்ற அமெரிக்கர்களை நைஜீரியாவின் தலைநகரைவிட்டுக் கிளம்புமாறு அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

நைஜீரியாவின் பெரிய மால்கள், பள்ளிகள், விடுதிகள், பார்கள், அரசுக் கட்டடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

`அதிபயங்கர தாக்குதல் நடக்கலாம்... நைஜீரியத் தலைநகரைவிட்டுக் கிளம்புங்கள்’ - எச்சரித்த அமெரிக்கா
J. David Ake

அமெரிக்க தூதரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-10-22), அமெரிக்கர்கள் வெளியில் நடமாடுவதைக் குறைக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தது. இந்த நிலையில் நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியைத் தொடர்ந்து பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

வரலாற்றில் 1980-களில் ஆறு மில்லியன் மக்கள்தொகையுடன் மிகவும் பாதுகாப்பாக இருந்த இடம் அபுஜா. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இஸ்லாமியக் குடியரசுக் குழுக்களின் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், நைஜீரியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படியாக வலியுறுத்தியிருக்கிறது. அதோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.

`அதிபயங்கர தாக்குதல் நடக்கலாம்... நைஜீரியத் தலைநகரைவிட்டுக் கிளம்புங்கள்’ - எச்சரித்த அமெரிக்கா
Sunday Alamba

கடந்த ஜூலை மாதம் குஜே நகரின் புறநகரிலுள்ள சிறைச்சாலையிலிருந்து சிலர் தப்பித்ததை அடுத்து, பாதுகாப்பற்ற நிலைமை நீடித்துவருவதாக அபுஜா மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.