Published:Updated:

பொம்மைத் துப்பாக்கியால் மிரட்டல்; வங்கியில் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த பெண்! - காரணம் என்ன?

சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த பெண்

வங்கியில் சொந்தப் பணத்தை எடுக்க அதிகாரிகள் ஒத்துழைக்காததால் ஒரு பெண் பொம்மை துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை மிரட்டியிருக்கிறார்.

பொம்மைத் துப்பாக்கியால் மிரட்டல்; வங்கியில் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த பெண்! - காரணம் என்ன?

வங்கியில் சொந்தப் பணத்தை எடுக்க அதிகாரிகள் ஒத்துழைக்காததால் ஒரு பெண் பொம்மை துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை மிரட்டியிருக்கிறார்.

Published:Updated:
சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த பெண்

லெபனான் நாட்டில் சொந்தப் பணத்தை எடுக்க அதிகாரிகள் ஒத்துழைக்காததால், வங்கிக்குள் புகுந்து ஒரு பெண் தனது பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சலி ஹஃபீஸ் என்ற பெண் தனது வங்கி சேமிப்புத் தொகை 13,000 டாலரை (சுமாா் ரூ.10.33 லட்சம்) எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் கெடுபிடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண் வங்கிக்குள் புகுந்து பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி தனது சொந்தப் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

அந்த நாடு பண நெருக்கடியால் சிக்கித் தவித்துவரும் நிலையில், வங்கிகளில் பணம் எடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சலி ஹஃபீஸின் சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தன் சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காகத் தன்னுடைய சேமிப்புப் பணத்தை எடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் மாதத்துக்கு 200 டாலா் மட்டுமே (சுமாா் ரூ.15,000) எடுக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர்.

அதையடுத்து, தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் இணைந்து வங்கிக்குள் புகுந்து பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை மிரட்டி, பணத்தை கொள்ளையடித்திருக்கிறார். அப்போது அந்தச் சம்பவத்தை சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினாா். லெபனானில் ஏராளமான மக்கள் தங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை எடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.