Published:Updated:

`இரத்தவழி பந்தம்' உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டும் லியோனார்டோ டிகாப்ரியோ! - பின்னணி இதுதான்!

லியோனார்டோ டிகாப்ரியோ

தாய்வழிப் பாட்டியின் நினைவாக உக்ரைனுக்கு ஆதரவாக நன்கொடையை வழங்கியுள்ளார் லியோனார்டோ டிகாப்ரியோ.

`இரத்தவழி பந்தம்' உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டும் லியோனார்டோ டிகாப்ரியோ! - பின்னணி இதுதான்!

தாய்வழிப் பாட்டியின் நினைவாக உக்ரைனுக்கு ஆதரவாக நன்கொடையை வழங்கியுள்ளார் லியோனார்டோ டிகாப்ரியோ.

Published:Updated:
லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 76.97 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளார். அவருக்கும் உக்ரைனுக்கும் தனிப்பட்ட உறவு ஒன்று உண்டு. அவரின் தாய் வழி பாட்டி உக்ரைன் ஒடேசா பகுதியில் பிறந்தவர். 1917இல் தன் பெற்றோர் உடன் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்துவிட்டார். அவரின் பெயர் ஹெலனே (Helene). ஹெலனே, லியோனார்டோ டிகாப்ரியோவின் தாய் இர்மெலினை (Irmelin Indenbirken) 1943இல், வான் தாக்குதலில் பதுங்கிக்கொள்ள அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையில் தான் பெற்றெடுத்தார். லியோனார்டோ அவரின் பாட்டியுடன் மிகுந்த நெருக்கம் உள்ளவர். லியோனார்டோ ஒரு வயதாக இருக்கும்போதே அவரது தாய் தந்தை விவாகரத்து பெற்றுக்கொண்டனர். லியோனார்டோவின் நடிப்புக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் ஹெலனே. அவர் 2008-ல் இறப்பதற்கு முன்பு வரை தான் நடித்த படங்களின் பிரிமீயர் ஷோவுக்கு உடன் அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தற்போது, தாய்வழி பாட்டியின் நினைவாக உக்ரைனுக்கு ஆதரவாக நன்கொடையை வழங்கியுள்ளார். International Vise grad Fund எனும் திட்டத்தை ஒருங்கிணைக்கும் Vise grad குழுமம் இதனை அறிவித்திருக்கிறது. இவர்கள் கிழக்கு ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு உதவும் முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்கள்.

தாய் மற்றும் பாட்டியுடன் லியானார்டோ
தாய் மற்றும் பாட்டியுடன் லியானார்டோ

லியானார்டோ மட்டுமில்லாது இன்னும் சில நடிகர்களும் இயக்குனர்களும் இந்தப் போரில் உக்ரைனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். கனடியன் நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ப்ளேக் லிவ்லி முன்னெடுத்திருக்கும் திட்டத்தில் பெறப்படும் நன்கொடைக்கு இரண்டு மடங்காக தரவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஏஞ்சலினா ஜோலி, பிரியங்கா சோப்ரா தங்களது ஆதரவை உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ள மிலா குனிஸ் (Mila Kunis) மற்றும் அஸ்டோன் குட்சர் (Ashton Kutcher) நன்கொடையாக அளித்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக 30 மில்லியன் அளவுக்கு சேகரிக்க இலக்கு கொண்டுள்ள இவர்கள் இப்போது 15 மில்லியன் அளவுக்கு சேர்த்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!