Published:Updated:

சீனா: மளமளவென பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்... பீதியில் மக்கள்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

தீ விபத்து ( ட்விட்டர் )

சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சீனா: மளமளவென பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்... பீதியில் மக்கள்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Published:Updated:
தீ விபத்து ( ட்விட்டர் )

சீனாவின் தெற்கு மாகாணமான ஹுனானின் தலைநகரான சாங்ஷா நகரத்தில் உள்ள மிக உயரமான அலுவலகக் கட்டடத்தில் இன்று பிற்பகல் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கட்டடத்தில் இருந்த அனைத்து மாடிகளிலும் பயங்கரமாக பற்றி எரிந்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் 42 மாடி கட்டடத்தின் வெளிப்புற சுவரில் தீப்பிடித்ததாக ஹுனானின் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டடத்தில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாமின் அலுவலகம் உள்ளது. ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.