Published:Updated:

`நீங்கள்தான் இறந்துவிட்டீர்களே...' - புகார் அளிக்கச் சென்ற முதியவருக்கு போலீஸ் சொன்ன அதிர்ச்சி பதில்

முதியவர்

``தன்னுடைய நிலப்பத்திரத்தைத் தேடியபோது, அதைக் காணவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.”

`நீங்கள்தான் இறந்துவிட்டீர்களே...' - புகார் அளிக்கச் சென்ற முதியவருக்கு போலீஸ் சொன்ன அதிர்ச்சி பதில்

``தன்னுடைய நிலப்பத்திரத்தைத் தேடியபோது, அதைக் காணவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.”

Published:Updated:
முதியவர்

மலேசியாவைச் சேர்ந்த லோ சூ சூன் (Low Choo Choon) (72) இறுதி ஊர்வல வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இறுதிக் காலத்தில் தானும், தன் மனைவியும் உயிரிழந்தால் அடக்கம் செய்வதற்காகச் சிறிது நிலத்தையும் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அந்த நிலத்தை விற்க லோ சூ சூன் முடிவுசெய்திருக்கிறார். அதற்கான நிலப்பத்திரத்தைத் தேடியபோது, அதைக் காணவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

லோ சூ சூன் (Low Choo Choon)
லோ சூ சூன் (Low Choo Choon)

அவர் காவலர்களிடம் புகார் அளித்தபோது, `நீங்கள்தான் எப்போதோ இறந்துவிட்டீர்களே, அப்படித்தானே பதிவில் இருக்கிறது’ என காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். `நான்தான் உயிருடன் இருக்கிறேனே... பிறகு எப்படி இறந்தவராக முடியும்?’ எனக் குழம்பிய லோ சூ சூன் தேசிய பதிவுத்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "பல ஆண்டுகளாக இறுதிச்சடங்கு செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆனால் எனக்கே தெரியாமல் யாரோ எனக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டார்கள்.

முதியவர்
முதியவர்
சித்திரிப்பு படம்

நான் இறந்துவிட்டேன் என அரசுப் பதிவுகளில் இருப்பதால் என்னால் சாலை வரிகூட கட்ட முடியவில்லை. தற்போதுதான் ஏதோ முயன்று அதிகாரிகளுக்கு நான் உயிருடன் இருப்பதை உணர்த்தி சாலை வரி செலுத்தியிருக்கிறேன். ஆனாலும், அரசின் எந்தச் சலுகையையும் தற்போது என்னால் பெற முடியவில்லை. இன்னும் சில மாதங்களுக்கு நான் இறந்தவனாகத்தான் இருக்க வேண்டும்போல..." என வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.