Published:Updated:

"தானமாக கொடுத்ததா நெனச்சுக்கோங்க"- முதல்மாத சம்பளத்தை பறிகொடுத்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்

இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்

தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்ப முயன்று, தவறுதலாக வேறு யாருக்கோ அனுப்பிவிட்ட இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

"தானமாக கொடுத்ததா நெனச்சுக்கோங்க"- முதல்மாத சம்பளத்தை பறிகொடுத்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்

தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்ப முயன்று, தவறுதலாக வேறு யாருக்கோ அனுப்பிவிட்ட இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்

மலேசியாவைச் சேர்ந்த ஃபஹதா பிஸ்தாரி (Fahada Bistari) என்ற இளம்பெண், தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை, ஆசை ஆசையாய் தன்னுடைய அம்மாவுக்கு ஆன்லைனில் அனுப்பியிருக்கிறார்.

இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்
இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்

ஆனால், எதிர்பாரதமாக அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது. பணத்தைப் பெற்றவரும் அதை திருப்பித்தராமல், ``தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!" அந்தப் பெண்ணிடமே கூறியிருக்கிறாராம். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணும், டிக்டாக்கில் கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ``இன்று நான் என்னுடைய முதல்மாத சம்பளத்தை வாங்கினேன். கொஞ்சநாள் மட்டுமே வேலைக்குச் சென்றிருந்ததால், சம்பளமும் குறைவுதான். இருப்பினும் அந்தப் பணத்தை என்னுடைய அம்மாவுக்கு அனுப்ப நினைத்தேன். முதல்மாத சம்பளம் என்பதால் பெரும் உற்சாகத்திலிருந்த நான், ஆன்லைனில் அம்மாவுக்குப் பணத்தை அனுப்பும்போது சரியாகக் கவனிக்கவில்லை. பின்னர் பணம் அனுப்பிய ரெசிப்ட்டை வைத்து அம்மாவிடம் கேட்டபோது தான், நான் வேறு யாருக்கோ பணத்தை மாற்றி அனுப்பியது எனக்கே தெரிந்தது.

பணத்தை மாற்றி அனுப்பிவிட்டு புலம்பும் பெண்
பணத்தை மாற்றி அனுப்பிவிட்டு புலம்பும் பெண்

அதையடுத்து, பணம் அனுப்பப்பட்ட நம்பரை வைத்து அந்த நபரைத் தொடர்புகொண்டபோது, அந்த நபர் `தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!' என்று கூறிவிட்டார்" எனக் கண்ணீருடன் பேசினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் ஃபஹதாவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

``ஆன்லைன் பரிவர்த்தனைகள் வந்தபிறகு, வங்கியோ அல்லது ஏடிஎம் மையங்களுக்கோ செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக அனுப்பலாம் என்பது மிகவும் எளிதாகிவிட்டது. இதில் அவ்வப்போது இந்தமாதிரியான சம்பவங்களும் நடப்பதுமுண்டு. இருப்பினும் யாரோ தவறுதலாக மாற்றி அனுப்பிய பணத்தை, அந்த நபர் மனிதாபிமான அடிப்படையிலாவது திருப்பித்தந்திருக்க வேண்டுமல்லவா" எனக் குமுறுகிறார்கள் இந்த வீடியோவை பார்ப்பவர்கள்.