Published:Updated:

ஒருதலை காதல்... கொலை மிரட்டல்; ஆப்பிள் வாட்ச் மூலம் இளம்பெண்ணின் இடத்தை டிராக் செய்தவர் கைது!

ஆப்பிள் வாட்ச் SE | Apple Watch SE ( சித்தரிப்பு படம் )

முதன்முறையாக ஆப்பிள் வாட்ச் மூலம் இளம்பெண் ஒருவரின் இருப்பிடத்தைக் கண்காணித்ததற்காக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருதலை காதல்... கொலை மிரட்டல்; ஆப்பிள் வாட்ச் மூலம் இளம்பெண்ணின் இடத்தை டிராக் செய்தவர் கைது!

முதன்முறையாக ஆப்பிள் வாட்ச் மூலம் இளம்பெண் ஒருவரின் இருப்பிடத்தைக் கண்காணித்ததற்காக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
ஆப்பிள் வாட்ச் SE | Apple Watch SE ( சித்தரிப்பு படம் )

அமெரிக்காவைச் சேர்ந்த லாரன்ஸ் வெல்ச் என்ற இளைஞரும், அமெரிக்கப் பெண் ஒருவரும் நட்பாகப் பழகி வந்திருக்கின்றனர். அதனால், ஒருவரை ஒருவர் தாங்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள `Life 360' என்ற செயலியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், லாரன்ஸ் வெல்ச் ஒருதலையாக தன் தோழியைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் அவருடைய காதலை ஏற்கவில்லை.

 கைது!
கைது!

அதைத் தொடர்ந்து, லாரன்ஸ் வெல்ச் அந்த பெண்ணுக்குப் பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து தனது `Life 360' செயலியைச் செயலிழக்கச் செய்துள்ளார். இதன் பிறகே பாதிக்கப்பட்ட பெண்ணின் வாகனத்தில் ​​வெல்ச் தனது ஆப்பிள் வாட்சைப் பயன்படுத்தி அவரது இருப்பிடத்தைக் கண்காணிக்கிறார் என்பதை அறிந்து கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், லாரன்ஸ் வெல்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிள் வாட்ச், ஏர் போட்கள், ஐபோன்கள் போன்ற பல பெரும்பாலான ஆப்பிள் சாதனங்களின் இருப்பிடத்தை Find My ஆப் மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும். ஆப்பிள் ஏர்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

இந்த நிலையில், ``தேவையற்ற கண்காணிப்பின் சிக்கலைத் தீர்க்க, ஆப்பிள் ஏர்டேக் மற்றும் Find My நெட்வொர்க் அடிக்கடி மாறும் தனித்துவமான புளூடூத் அடையாளங்காட்டிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இடத்திலிருந்து இடத்திற்கு நீங்கள் கண்காணிக்கப்படுவதைத் தடுக்க இது உதவுகிறது" என ஆப்பிள் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism