Published:Updated:

ஆஸ்திரேலிய போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி... கைது செய்த டெல்லி காவல்துறை - நடந்தது என்ன?!

ஆஸ்திரேலியாவில் தேடப்படும் இந்தியர் ( ட்விட்டர் )

குற்றவாளிப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சன்மானமாக வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலிய போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி... கைது செய்த டெல்லி காவல்துறை - நடந்தது என்ன?!

குற்றவாளிப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சன்மானமாக வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.

Published:Updated:
ஆஸ்திரேலியாவில் தேடப்படும் இந்தியர் ( ட்விட்டர் )

இந்தியாவைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் (38) என்பவர் தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவந்திருக்கிறார். இவர், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியிருந்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு, அக்டோபர் 23-ம் தேதி வாங்கெட்டி என்னும் கடற்கரையில் தன் செல்லப்பிராணியுடன் வாக்கிங் சென்ற டோயா கார்டிங்லி (24) என்ற ஆஸ்திரேலியப் பெண் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் ராஜ்விந்தர் சிங் முக்கியமான குற்றவாளியாகக் கருதப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

கொலை
கொலை

அக்டோபர் 23, 2018 அன்று கொலை நடந்திருக்கிறது. கொலை நடந்து ஒரு நாள் கழித்து ராஜ்விந்தர் சிங் சிட்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிவிட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. கொலை நடந்து மூன்றாண்டுகளாகிவிட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபரைப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த, மார்ச் 2021 இல், ராஜ்விந்தர் சிங்-ஐ நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காவல்துறை
காவல்துறை
ட்விட்டர்

மேலும், குயின்ஸ்லாந்து காவல்துறையின் கண்காணிப்பாளர் சோனியா ஸ்மித் செய்தியாளர்களிடம், ``தேடப்படும் குற்றவாளி பஞ்சாப்பிலுள்ள பட்டர் கலான் பகுதியில் வசிப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் ராஜ்விந்தர் சிங் இருக்கும் இடத்தைப் பற்றித் தகவல் தெரிவிக்க குயின்ஸ்லாந்து காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.

அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சன்மானமாக வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய செவிலியர் ராஜ்விந்தர் சிங்கை டெல்லி போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.