Published:Updated:

`ஸ்பீட் போதவில்லை' - சொந்தமாகவே பிராட்பேண்டை உருவாக்கிய நபர்; அமெரிக்க அரசு கொடுத்த தொகை!

broadband

பல ஆண்டுகளாக மோசமான இன்டர்நெட் கனெக்‌ஷனை சமாளித்து வந்த நபர், தற்போது சொந்தமாகவே பிராட்பேண்டை உருவாக்கியுள்ளார்.

`ஸ்பீட் போதவில்லை' - சொந்தமாகவே பிராட்பேண்டை உருவாக்கிய நபர்; அமெரிக்க அரசு கொடுத்த தொகை!

பல ஆண்டுகளாக மோசமான இன்டர்நெட் கனெக்‌ஷனை சமாளித்து வந்த நபர், தற்போது சொந்தமாகவே பிராட்பேண்டை உருவாக்கியுள்ளார்.

Published:Updated:
broadband

இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அதன் வேகம்தான் பல நேரங்களில் குறைந்து எரிச்சலை ஏற்படுத்தும். இதனிடையே அமெரிக்காவின் மிச்சிகனைச்(Michigan) சேர்ந்த ஜெரட் மௌச் (Jared Mauch) என்ற நபர் இன்டர்நெட் சேவையை வழங்கும் பிராட்பேண்டை (Broad band) உருவாக்கியுள்ளார். காரணம் இவர் பல ஆண்டுகளாக மோசமான இன்டர்நெட் கனெக்‌ஷனை எதிர்கொண்டு வந்திருக்கிறார். மேலும், இன்டர்நெட் கனெக்‌ஷன் சரியாகக் கிடைக்காதபோதிலும் ஒவ்வொரு மாதமும் இன்டர்நெட் சேவையை வழங்கும் பிராட்பேண்டிற்கான தொகையை மட்டும் அவர் செலுத்தி வந்திருக்கிறார்.

Jared Mauch
Jared Mauch

இதனால் சரியான இன்டர்நெட் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், ஒவ்வொரு மாதமும் இன்டர்நெட் கனெக்‌ஷன் சரியாகக் கிடைக்காதபோது அதற்கான தொகையை மட்டும் ஏன் செலுத்த வேண்டும் என்று எண்ணியும் அவரே சொந்தமாக பிராட்பேண்டை உருவாக்கியுள்ளார். இதனை உருவாக்கியதற்காக அமெரிக்க அரசாங்கம் அவருக்கு 2.6 மில்லியன் டாலரை வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் பேசும்போது ”காம்காஸ்டிடம் இணைய சேவைகளை வழங்குமாறு கேட்டபொழுது அவர்கள் 50,000 டாலர் (இந்திய மதிப்பில் 40 லட்சம்) ஆகும் என்றனர். இதனால் நானே சொந்தமாக உருவாக்க வேண்டும் என்று எண்ணி பிராட்பேண்டை உருவாக்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.