Published:Updated:

`செவ்வாய் கிரகம் செல்ல ஆசை!' - நெற்றியில் எலானின் பெயர் மற்றும் ராக்கெட்டை பச்சை குத்திக்கொண்ட நபர்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க் ரசிகர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக குத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

`செவ்வாய் கிரகம் செல்ல ஆசை!' - நெற்றியில் எலானின் பெயர் மற்றும் ராக்கெட்டை பச்சை குத்திக்கொண்ட நபர்!

எலான் மஸ்க் ரசிகர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக குத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தினமும் எதாவது ஒரு விஷயத்தை ட்வீட் செய்து, பேசுபொருளாகவே மாறி வருகிறார்.

ப்ளூ டிக் விவகாரம், ஊழியர்களின் பணிநீக்கம் போன்றவற்றால் அவர் மீது பலர் கோபம் கொண்டாலும், அவருக்கென்று ஆதரவு தெரிவிக்கும் சிலர் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் எலான் மஸ்க்கின் தீவிர ஆதரவாளர்கள் அவரை கௌரவிக்கும் வகையில், 4.8 கோடி செலவில் 30 அடி நீளத்திற்கு சிலையை நிறுவியிருந்தனர். இதனிடையே தற்போது எலான்  மஸ்க்கின் ரசிகர் ஒருவர்  அவரின் பெயரை பச்சைக் குத்தியுள்ள  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க்கின் பெயரை பச்சைக் குத்திக் கொண்ட மனிதர்
எலான் மஸ்க்கின் பெயரை பச்சைக் குத்திக் கொண்ட மனிதர்

பிரேசிலைச் சேர்ந்தவர் ரோட்ரிகோ. எலான் மஸ்கின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தன் நெற்றியில் மஸ்க்கின் பெயரையும், ஸ்பேஸ் எக்ஸ்  ராக்கெட்டையும் பச்சை குத்திக்கொண்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தின் மூலம் எலான் மஸ்க் தன்னையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்வார் என்ற கனவுடன் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ரோட்ரிகோ பேசும்போது, "எலான் மஸ்க் மீதான அன்பை என்னால் விவரிக்க முடியாது. அவர் என்ன செய்தாலும் அவை அனைத்தும் மக்களுக்கானதுதான். அவர் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளார். இதன் மூலம் அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். எலான் மஸ்க் எனக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம். 

எனக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு இவை அனைத்தும் தெரியும், நான் ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால் அது மனிதகுலத்தின் நன்மைக்காகத்தான் என்பது அவளுக்கு தெரியும்" என்று அவர் பேசியிருக்கிறார்.  ரோட்ரிகோ என்ற இந்த நபர் 2016ம் ஆண்டு வரை பிரேசிலில் சிறைத் துறை அதிகாரியாக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.