Published:Updated:

அமெரிக்கா: சமையல் காஸ் வாங்கச் சென்ற நபர்... போன இடத்தில் லாட்டரிச்சீட்டு வாங்கியதால் அதிர்ஷ்டம்!

வில்லியம் ஜோன்ஸ் ( ட்விட்டர் )

ஜோன்ஸ் குறிப்பிட்ட தொகைக்கு இன்ஸ்டன்ட் ஸ்க்ராச் லாட்டரிச்சீட்டு வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு 500 டாலர் பரிசு விழுந்திருக்கிறது. அதையடுத்து...

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வில்லியம் ஜோன்ஸ் (32 வயது) என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் சமீபத்தில் தனக்கு அசைவ உணவு சமைப்பதற்காக, காஸ் வாங்க உள்ளூரிலிருந்த கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு லாட்டரிச்சீட்டு விற்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்ட ஜோன்ஸ் குறிப்பிட்ட தொகைக்கு இன்ஸ்டன்ட் ஸ்க்ராச் லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு 500 டாலர் பரிசு விழுந்திருக்கிறது.

அதைச் சற்றும் எதிர்பாராத வில்லியம் ஜோன்ஸ், மீண்டும் ஒரு முறை லாட்டரி வாங்கிப் பார்ப்போமென, 20 டாலருக்கு 100 மில்லியன் டாலர் பரிசுத்தொகைக்கான மெகா கேஷ் டிக்கெட் லாட்டரியை வாங்கியிருக்கிறார்.

வில்லியம் ஜோன்ஸ்
வில்லியம் ஜோன்ஸ்
ட்விட்டர்

அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீச, இரண்டாவது முறையும் வில்லியம் ஜோன்ஸுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 80 லட்சம்) பரிசு விழுந்திருக்கிறது.

அதையடுத்து அந்த லாட்டரி நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் டாலருக்கான காசோலையைப் பெற்றுக்கொண்ட வில்லியம் ஜோன்ஸ், ``இந்தப் பரிசுத்தொகையை என்னுடைய திருமணத்துக்காகச் செலவிடப்போகிறேன்" என்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!