Published:Updated:

லாட்டரியில் விழுந்த ரூ.248 கோடியை மனைவி, குழந்தைகளிடம் சொல்லாமல் மறைத்த நபர் - காரணம் தெரியுமா?!

பணம்

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 80 யுவானுக்கு, ஏழு எண்களைக்கொண்ட ஒரே மாதிரியான 40 லாட்டரிச்சீட்டுகளை வாங்கி, ரூ.248 கோடியைப் பரிசாக வென்றிருக்கிறார்.

லாட்டரியில் விழுந்த ரூ.248 கோடியை மனைவி, குழந்தைகளிடம் சொல்லாமல் மறைத்த நபர் - காரணம் தெரியுமா?!

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 80 யுவானுக்கு, ஏழு எண்களைக்கொண்ட ஒரே மாதிரியான 40 லாட்டரிச்சீட்டுகளை வாங்கி, ரூ.248 கோடியைப் பரிசாக வென்றிருக்கிறார்.

Published:Updated:
பணம்

சீனாவில், லாட்டரி மூலம் ரூ.248 கோடியை வென்ற நபர், அதைத் தன்னுடைய குழந்தைகள், மனைவியிடம் மறைத்ததற்காகக் கூறிய காரணம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

லீ (Li) என்றறியப்படும் இந்த நபர், சீனாவின், குவாங்சி ஜுவாங் (Guangxi Zhuang) எனும் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 80 யுவானுக்கு, ஏழு எண்களைக்கொண்ட ஒரே மாதிரியான 40 லாட்டரிச்சீட்டுகளை வாங்கி, 219 மில்லியன் யுவான், அதாவது இந்திய மதிப்பில் ரூ.248 கோடியைப் பரிசாக வென்றார்.

லாட்டரி
லாட்டரி

கடந்த அக்டோபர் 24-ம் தேதியன்று பரிசைப் பெற்றுக்கொண்ட லீ, அதிலிருந்து 5 மில்லியன் யுவானை, தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பரிசைப் பெறச் செல்லும் போது கார்ட்டூன் கெட்டப்பில் சென்றிருக்கிறார். செய்தித்தாள்களில் புகைப்படம் வந்தால் தன் வீட்டுக்கு இது தெரிந்தவிடும் என்ற காரணத்துக்காக. இந்த நிலையில், சீனச் சட்டத்தின்படி, அவருக்கு 43 மில்லியன் யுவான் வரி விதிக்கப்படும், அதைத் தொடர்ந்து 5 மில்லியன் யுவானை நன்கொடையாக அளித்ததுபோக, 171 மில்லியன் யுவானை லீ தன்னுடன் எடுத்துச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. இது பற்றி சீனப் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், தான் பரிசு வென்றதையடுத்து லீ கூறியதாக வெளியான தகவலின்படி, ``கடந்த பத்தாண்டுகளாக லாட்டரிச்சீட்டுகளைத் தொடர்ந்து வாங்குகிறேன். லாட்டரி வாங்குவதை நான் ஒரு பொழுதுபோக்காகக் கருதுகிறேன். என் குடும்பமும் அதைப் பொருட்படுத்தவில்லை.

பணக்காரர்
பணக்காரர்

அதுமட்டுமல்லாமல், அதில் அதிக பணமும் நான் செலவழிப்பதில்லை. கடந்தகாலத்தில், சில டஜன் யுவானை மட்டுமே வென்றிருந்தேன். இருப்பினும், லாட்டரி எனக்கு நம்பிக்கையளிக்கிறது. இந்த முறை, நான் லாட்டரி வென்றதைப் பற்றி, நான் என் மனைவியிடமோ, குழந்தையிடமோ சொல்லவில்லை. ஏனெனில், ஒருவேளை அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக உணரலாம். மேலும், எதிர்காலத்தில் குழந்தைகள் படிக்காமலோ, கடுமையாக உழைக்காமலோ போகலாம் என்று கவலைப்படுகிறேன். அதோடு, பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்று இன்னும் முடிவுசெய்யவில்லை. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் திட்டமிடச் சிறிது நேரம் எடுத்துக்கொள்வேன்" என்று லீ கூறியிருக்கிறார்.