Published:Updated:

ஆணுறுப்பைப் பெரிதாக்க அங்கே வளையம்; விபரீதத்தில் முடிந்த நண்பர்கள் டிப்ஸ்- இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

விபரீதம்

``நான்கு மாதங்களாக ஆணுறுப்பில் இரும்பு வளையத்தை அணிந்திருப்பதால் அது தன்னுடைய ஆண்குறியைப் பெரிதாக்கும் என்று அவர் நம்பினார்." - மருத்துவர்கள்

ஆணுறுப்பைப் பெரிதாக்க அங்கே வளையம்; விபரீதத்தில் முடிந்த நண்பர்கள் டிப்ஸ்- இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

``நான்கு மாதங்களாக ஆணுறுப்பில் இரும்பு வளையத்தை அணிந்திருப்பதால் அது தன்னுடைய ஆண்குறியைப் பெரிதாக்கும் என்று அவர் நம்பினார்." - மருத்துவர்கள்

Published:Updated:
விபரீதம்

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பு வலிப்பதாக மருத்துவரை அணுகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஆணுறுப்பில் மோதிரம் போன்ற வளையம் அணிவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக மருத்துவர்கள் விசாரித்தபோது, ``என்னுடைய ஆணுறுப்பு நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் என் நண்பர்கள் இந்த வளையத்தை அணிந்தால் ஆணுறுப்பு நீளமாகும் எனக் கூறினார்கள். எனவே, கடந்த நான்கு மாதங்களாக நான் இதை அணிந்திருக்கிறேன்" என விளக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆணுறுப்பைப் பெரிதாக்க அங்கே வளையம்; விபரீதத்தில் முடிந்த நண்பர்கள் டிப்ஸ்- இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

அதையடுத்து, அவரைக் கண்டித்த மருத்துவர்கள், ``இந்த வளையம் ஆணுறுப்புக்குச் செல்லவேண்டிய ரத்தத்தை தடுத்ததால் ஆணுறுப்பு வீக்கமாகியிருக்கிறது. மேலும், இந்த உலோகம் ஆணுறுப்பில் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, உடனே அதை அகற்ற வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இறுதிவரை மருத்துவர்களால் முடியவில்லை.

கடைசி வாய்ப்பாக தீயணைப்பு வீரர்களை அழைத்து விபரத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நான்கு தீயணைப்பு வீரர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்து, அந்த மோதிர வளையத்தை அகற்ற முயன்றிருக்கிறார்கள். இறுதியில், ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மின் கருவிகள் மற்றும் வைரத்தை வெட்ட பயன்படுத்தப்படும் வெல்டிங் கட்டர்களைக்கொண்டு அந்த வளையத்தை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.

மருத்துவம்
மருத்துவம்

இது தொடர்பாக மருத்துவர்கள், ``நான்கு மாதங்களாக ஆணுறுப்பில் இரும்பு வளையத்தை அணிந்திருப்பதாக அந்த நபர் கூறினார். அது தன்னுடைய ஆண்குறியைப் பெரிதாக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் ரத்தம் செல்ல முடியாததால் அது வீக்கமடைந்தது. உறுப்பு செயலிழந்திருக்கும் என நாங்கள் அஞ்சினோம். அந்த உலோகம் உறுப்பைத் துண்டித்திருக்கவும் வாய்ப்பிருந்தது. ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.