Published:Updated:

81 வயதில் முதன்முறையாகத் தன் 79 வயது தங்கையை நேரில் சந்தித்த அண்ணன்! - எப்படி தெரியுமா?

அண்ணன் - தங்கை

81 வயது ஜான் எல்லிஸ்(John Ellis) என்பவர், இணையதளத்தின் மூலம் தன்னுடைய 79 வயது சகோதரி ஷெர்லி ஜோன்ஸ்-ஐ(Shirley Jones) முதன்முறையாகச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

81 வயதில் முதன்முறையாகத் தன் 79 வயது தங்கையை நேரில் சந்தித்த அண்ணன்! - எப்படி தெரியுமா?

81 வயது ஜான் எல்லிஸ்(John Ellis) என்பவர், இணையதளத்தின் மூலம் தன்னுடைய 79 வயது சகோதரி ஷெர்லி ஜோன்ஸ்-ஐ(Shirley Jones) முதன்முறையாகச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

Published:Updated:
அண்ணன் - தங்கை

அறிவியல் தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலகட்டத்துக்கு முந்தைய நாள்களில், சாதாரணமாகத் திருவிழாக்களில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் வேலையாக இருக்கும். ஆனால், இன்றைய இன்டர்நெட் யுகத்தில், ஏதோவொரு நாட்டில் தொலைந்துபோனாலுமேகூட கண்டுபிடிப்பதென்பது எளிமையாகிவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டான ஒரு நிகழ்வாகத்தான், இங்கிலாந்தின் நோர்ஃபோக்கைச்(Norfolk) சேர்ந்த 81 வயது ஜான் எல்லிஸ்(John Ellis) என்பவர், இணையதளத்தின் மூலம் தன்னுடைய 79 வயது சகோதரி ஷெர்லி ஜோன்ஸ்-ஐ(Shirley Jones) முதன்முறையாகச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

கூகுள் தேடலில்
கூகுள் தேடலில்

தற்போது 81 வயதாகும் ஜான் எல்லிஸ், தன்னுடைய 18 வயது வரை தன்னுடைய சகோதரி ஐரீனுடன் குழந்தைகள் காப்பகத்தில் வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில் ஷெர்லி ஜோன்ஸ்-ம், அவரின் உடன்பிறப்புகளும் எதிர்பாராதவிதமாக தங்கள் குடும்பத்தின் வேரைக் கண்டறிய genealogy website-ல் நுழைந்தபோது, தங்களுக்குச் சகோதர, சகோதரி இருப்பது தெரியவர அனைவருமே சந்தோஷத்தில் பிரமித்தனர். அதன்பிறகு ஷெர்லி ஜோன்ஸுடன், வலைதளத்திலேயே பேசிவந்த ஜான் எல்லிஸ், சிறுவயதில் தன்னுடைய மூத்த சகோதரி ஐரீனுடன் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்ததைக் கூறியிருக்கிறார். இருப்பினும், அவருக்கு தன்னுடைய அறியப்படாத நான்கு உடன்பிறப்புகள் பற்றி எந்த தகவலுமே கிடைக்கவில்லை.

அண்ணன் தங்கை
அண்ணன் தங்கை
Vijay.T

அதன்பிறகு ஒருவழியாக ஜான் எல்லிஸும், ஷெர்லி ஜோன்ஸும் நேரில் பார்க்க முடிவுசெய்து, இறுதியாக லாஸ் வேகாஸ்(Las Vegas) விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டபோது இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். பின்னர் தனக்கு 4 உடன்பிறப்புகள் மட்டுமல்ல, 40 உறவினர்களும் இருப்பதைக் கண்டுபிடித்த ஜான் எல்லிஸ், ``இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது நான் அனைத்தையும் எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் அனைவரும் என்னை இருகரம் நீட்டி வரவேற்றனர்" என நோர்ஃபோக் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜான் எல்லிஸ், தன்னுடைய தாய் நோர்ஃபோக்கைவிட்டு வெளியேறிய பிறகு அவருக்கு வேறொரு துணையுடன் மூன்று பெண்களும் ஒரு மகனும் இருந்ததாக, genealogy website-ல் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.