Published:Updated:

மூளைச்சாவு; உறுப்பு தானத்துக்குத் தயாரானபோது... உடலில் தெரிந்த அசைவு! - அமெரிக்காவில் ஆச்சர்யம்

ரியான் மார்லோ - அவரின் மனைவி ( ட்விட்டர் )

உடல் உறுப்பு தானம் செய்ய சில நிமிடங்கள் இருந்த நிலையில், இறந்த ரியான் மார்லோவைக் காண அவரின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் வந்திருக்கின்றனர்.

மூளைச்சாவு; உறுப்பு தானத்துக்குத் தயாரானபோது... உடலில் தெரிந்த அசைவு! - அமெரிக்காவில் ஆச்சர்யம்

உடல் உறுப்பு தானம் செய்ய சில நிமிடங்கள் இருந்த நிலையில், இறந்த ரியான் மார்லோவைக் காண அவரின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் வந்திருக்கின்றனர்.

Published:Updated:
ரியான் மார்லோ - அவரின் மனைவி ( ட்விட்டர் )

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ரியான் மார்லோ என்ற போதகர், பாக்டீரியா தொற்று காரணமாக மூளை வீக்கம் ஏற்பட்டு பதினைந்து நாள்கள் கோமாவில் இருந்திருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில், திடீரென அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்திருக்கிறது. மருத்துவர்கள் அதை உறுதியாக தெரிவித்திருக்கின்றனர். மேலும், ரியான் மார்லோ உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவுசெய்திருந்தார். அதனால், அவரின் உடலின் முக்கிய உறுப்புகளை ஆபரேஷன் செய்து எடுக்கவிருப்பதாக அவரின் மனைவி முகநூலிலும் லைவ் வீடியோவில் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.

உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம் செய்யச் சில நிமிடங்கள் இருந்த நிலையில், இறந்த ரியான் மார்லோவைக் காண அவரின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் வந்திருக்கின்றனர். மூளைச்சாவு அடைந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டு, எந்தவித அசைவும் இல்லாத ரியான் மார்லோவின் உடலில் குழந்தைகள் அருகில் வந்ததும் சிறு அசைவு ஏற்பட்டிருக்கிறது. இதை கவனித்த உறவினர் ஒருவர் ரியான் மார்லோவின் மனைவியிடம் தெரிவிக்க, அவர் மருத்துவர்களை அணுகியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மருத்துவம்
மருத்துவம்
மாதிரிப் படம்

அதன் பிறகு மருத்துவர்கள் மீண்டும் அவரின் உடலைச் சோதித்தபோது அவர் மூளை வேலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மருத்துவரீதியில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒருவர் மீண்டும் உயிருடன் இருக்கும் இந்தச் செய்தி அமெரிக்கா முழுவதும் வேகமாகப் பரவியது. அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில்தான் இருக்கிறது என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.