ஒரே ஒரு பயணிக்காக விமானம் 8 மணி நேரம் பயணித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விமானங்களில் பயணிக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காய் ஃபோர்சித் 'Kai Forsyth' என்பவர் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு 8 மணி நேரமாக விமானத்தில் ஒரே பயணியாக பறந்த 'வித்தியாசமான அனுபவத்தைப் பற்றி ' Kai Forsyth' (ஃபோர்சித் ) ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார். 8 மணி நேரமாக அவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணித்ததை அறிந்து ஃபோர்சித் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அமெரிக்காவைச் சென்றடைய சுமார் 8 மணி நேரம் ஆகும் என்பதால் தற்காலிகமாக ஒரு படுக்கையை அமைத்துள்ளார். இந்த வீடியோவில் நிறைய உணவுப் பண்டங்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். விமானம் முழுக்க காலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிக்டாக் பிரபலம் ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை உருவாக்கி, டிக்டாக்கில் வெளியிட்டார். இதைப்பார்த்த டிக் டாக் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆடிப் போயுள்ளனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.