Published:Updated:

உலகின் மோசமான கழிவறையை தேடி 91 நாடுகளில் அலைந்த நபர்; இறுதியில் அதைக் கண்டுபிடித்தாரா?!

கிரஹாம் அஸ்கி ( ட்விட்டர் )

உலகின் மிக மோசமான கழிவறையை கண்டுபிடிக்க பிரிட்டிஷைச் சேர்ந்த ஒருவர் 90 நாடுகளுக்கு பயணித்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

உலகின் மோசமான கழிவறையை தேடி 91 நாடுகளில் அலைந்த நபர்; இறுதியில் அதைக் கண்டுபிடித்தாரா?!

உலகின் மிக மோசமான கழிவறையை கண்டுபிடிக்க பிரிட்டிஷைச் சேர்ந்த ஒருவர் 90 நாடுகளுக்கு பயணித்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

Published:Updated:
கிரஹாம் அஸ்கி ( ட்விட்டர் )

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கிரஹாம் அஸ்கி (Graham Askey - 58) என்பவர் ஒரு blog நடத்தி வருகிறார். இவர் உலகின் மிக மோசமான கழிவறை எது என்ற வினாவுடன் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அதற்காக £150,000 பவுண்ட் இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி செலவழித்து 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் பயணம் சென்றிருக்கிறார். பல மலைப்பிரதேசங்கள், குக்கிராமங்கள் என பல்வேறு தரப்பு மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார். அதன் இறுதியில் உலகின் மிக மோசமான கழிவறை எது என்பதையும் அவர் கண்டறிந்திருக்கிறார்.

கிரஹாம் அஸ்கி கண்டறிந்த கழிவறைகள்
கிரஹாம் அஸ்கி கண்டறிந்த கழிவறைகள்
ட்விட்டர்

இது தொடர்பாக அவர், ``ஒரு முறை மொராக்கோவுக்குச் சென்றபோது பொதுக் கழிவறைகள் மற்றும் குறிப்பாக அவற்றின் மோசமான கட்டுமானம் என்னை ஈர்த்தது. எனவே அதைத் தொடர்ந்து விடுமுறையின்போது உலகின் மோசமான கழிவறை எது எனத் தேட முடிவெடுத்தேன். நான் செய்த பயணங்கள் மற்றும் அங்கு பார்த்த கழிவறைகள் தொடர்பாக 'டாய்லெட்ஸ் ஆஃப் தி வைல்ட் ஃபிரான்டியர்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அதில் எல்லா தகவலையும் இணைத்திருக்கிறேன்.

உலகின் மிக மோசமான கழிவறை என கிரஹாம் அஸ்கி கூறும் கழிவறை
உலகின் மிக மோசமான கழிவறை என கிரஹாம் அஸ்கி கூறும் கழிவறை
ட்விட்டர்

`உலகின் மிக மோசமான பொது கழிப்பறை' தஜிகிஸ்தானின் அய்னி பகுதியில், பாமிர்ஸின் மேற்கு விளிம்பில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அருகில் இருக்கிறது. அந்த கழிவறையை `நரகத் துளை' எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். அந்தக் கழிவறை அவ்வளவு அருவருப்பாக இருக்கும். அதை வார்த்தைகளில் சொன்னால் படிக்கும் நீங்கள் வாந்தி எடுப்பது நிச்சயம். அந்தக் கழிவறை வெறும் துணியால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் கொடுமை என்னெவென்றால்.... அந்த துணிதான் கழிப்பறை காகிதமாக பயன்படுத்தப்படுகிறது.

கிரஹாம் அஸ்கி
கிரஹாம் அஸ்கி
ட்விட்டர்

அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் பாறைகளின் அடியில் கொடிய பாம்புகள் மற்றும் எலிகள் குடியிருப்பதால் உயிருக்கு பெரும் அபாயம்கூட இருக்கிறது. இருப்பினும், உள்ளூர்வாசிகள் அதை முழுமையாகப் பயன்படுத்தியது போல் தெரிகிறது. இந்த மோசமான பொது கழிப்பறைகளை வாசகர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி, தேவையற்ற சுகாதார அபாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.