பால் கெல்லி (Paul Kelly) என்பவர் டெஸ்லா காரைப் பயன்படுத்தி வருபவர். இவர் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் டெஸ்லா காரில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் கார் சேதமுற்றது. ஆனால் உள்ளே இருந்த கெல்லிக்கும் அவருடன் பயணித்த அவரது இரண்டு மகன்களுக்கும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக விபத்திலிருந்து தப்பினர். எனவே விபத்திலிருந்து எந்தக் காயமுமின்றி தன் குடும்பத்தைப் பாதுகாத்த டெஸ்லா காரின் பாதுகாப்பு அமைப்பையும் அதன் கட்டுமானத்தையும் பாராட்டும் விதமாக டெஸ்லாவின் நிறுவனரான Elon Musk-க்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் பால் கெல்லி.
இது குறித்து கூறிய பால் கெல்லி, " ஆம்புலன்ஸ் வருவதற்கு நாங்கள் காத்திருந்த நேரம் முழுவதும் தீயணைப்புப் படையினர் எங்களுடன் இருந்தார்கள். அவர்களுக்கு நானும் எனது இரு மகன்களும் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மேலும் 'என் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததற்காக எலான் மஸ்குக்கும் அவரது டெஸ்லா நிறுவனத்தின் குழுவிற்கும் நன்றி' " என்று தெரிவித்திருந்தார். இதை சமூக வலைதளங்களில் கண்ட பலரும் தாங்களும் டெஸ்லா காரைப் பயன்படுத்தி வருவதாகவும் தங்களுக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டபோது டெஸ்லா கார் தங்களை விபத்திலிருந்தது காப்பாற்றியாதவும் கூறி வருகின்றனர். அண்மையில்கூட ஒருவர் டெஸ்லாவின் 'ஆட்டோ பைலட்' தன்னை விபத்திலிருந்து காப்பாற்றியதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
