Published:Updated:

லாட்டரியில் ரூ.81 கோடி ஜாக்பாட்; செலவழிக்க வாழ்க்கைத்துணையைத் தேடும் ஜெர்மனி இளைஞர்!

லாட்டரியில் ரூ.81 கோடி வென்ற குர்சாட் யில்டிரிம் ( ட்விட்டர் )

லாட்டரியில் விழுந்த தொகையில், ரூ.3.6 கோடியில் (Ferrari 448 Pista), ரூ.2 கோடிக்கு (Porsche Turbo S Cabriolet) கார்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரம் தனக்குப் பிடித்த மதுபானம் போன்றவற்றை வாங்குகிறார்.

ஜெர்மனியைச் சேர்ந்த குர்சாட் யில்டிரிம் (Kursat Yildirim) என்பவர், கடந்த செப்டம்பர் 24-ம் தேதியன்று லாட்டரியில் ரூ.81 கோடியை பரிசாக வென்றார். அதற்கடுத்து உடனடியாக எஃகு தொழிற்சாலையொன்றில் தான் செய்துவந்த வேலையைவிட்டு நின்றுவிட்டார். பின்னர், ரூ.3.6 கோடியில் ஃபெராரி 448 பிஸ்தா (Ferrari 448 Pista), ரூ.2 கோடியில் போர்ஷே டர்போ எஸ் கேப்ரியோலெட் (Porsche Turbo S Cabriolet) கார்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரம், தனக்குப் பிடித்த மதுபானம் போன்றவற்றை வாங்கினார்.

காதலர்கள்
காதலர்கள்
லாட்டரியில் ரூ.81 கோடி வென்ற குர்சாட் யில்டிரிம்
லாட்டரியில் ரூ.81 கோடி வென்ற குர்சாட் யில்டிரிம்

இருப்பினும் 41 வயதாகும் குர்சாட்டுக்கு இன்னும் அவருக்குப் பிடித்த பெண், வாழ்க்கைத்துணையாக அமையவில்லையாம். இது பற்றி ஜெர்மனி ஊடகத்திடம் பேசிய குர்சாட் யில்டிரிம், ``நான் இன்னும் தனிமையில் இருக்கிறேன். நான் காதலிக்க விரும்புகிறேன் . என்னுடன் வாழ்வில் பயணம் செய்ய, என்னோடு குடும்பம் நடத்தத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணைத் தேடுகிறேன். அவள் பொன்னிறமாகவோ அல்லது அழகியாகவோ இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்ன நடந்தாலும் நான் நம்பக்கூடிய ஒரு பெண் எனக்குத் தேவை. என்னை நம்புங்கள், எங்கிருந்து வருகிறேன் என்பதை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஒருபோதும் திமிர்பிடித்தவனாக மாற மாட்டேன்.

லாட்டரியில் ரூ.81 கோடி வென்ற ஜெர்மனி நபர்!
லாட்டரியில் ரூ.81 கோடி வென்ற ஜெர்மனி நபர்!

நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்று கிணறு தோண்டவும், அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கவும் விரும்புகிறேன். அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன். மேலும், சில நல்ல காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்" என்று கூறினார். அதோடு ஆடம்பர கார்கள் வாங்கியதைப் பற்றிக் கூறிய குர்சாட் யில்டிரிம், அவற்றைத் தன்னை வெறுப்பவர்களுக்காகவும், தன்மீது பொறாமைகொண்டவர்களுக்காகவும் வாங்கியதாகத் தெரிவித்தார்.