Published:Updated:

70 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மரடோனாவின் T-Shirt; பின்னணி இதுதான்!

ஏலம் போன டி-சர்ட்

இவ்வளவு பெரிய தொகைக்கு மரடோனாவின் டி-சர்ட் ஏலம் போனதற்குக் காரணம் அதன் பின்னணியில் இருக்கும் வரலாறுதான்.

70 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மரடோனாவின் T-Shirt; பின்னணி இதுதான்!

இவ்வளவு பெரிய தொகைக்கு மரடோனாவின் டி-சர்ட் ஏலம் போனதற்குக் காரணம் அதன் பின்னணியில் இருக்கும் வரலாறுதான்.

Published:Updated:
ஏலம் போன டி-சர்ட்
ஒரு டி-சர்ட் விலை என்ன இருக்கும்? 100 ரூபாயில் ஆரம்பித்து இலட்சக்கணக்கில் கூட விலை இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஏலம் போன டி-சர்ட்டின் விலை இந்திய மதிப்பில் 70 கோடி. இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு காரணம் அந்த டி-சர்ட்டின் பின்னணியில் இருக்கும் வரலாறுதான்.

டியாகோ மரடோனா அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர். கடந்த 2020-ம் ஆண்டு அவர் உயிரிழந்தார். சமீபத்தில் அவர் அணிந்திருந்த டி-சர்ட் 9.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 'நூற்றாண்டின் கோல்' என சிலாகிக்கப்பட்ட கோல் அடிக்கும் போது அவர் அணிந்திருந்த டி-சர்ட் தான் அது எனச் சொல்லப்படுகிறது. இதனை ஏலத்தில் விற்பனை செய்த Sotheby என்கிற நிறுவனம், "ஏலத்தில் இதுவரை வந்த பொருட்களிலேயே அதிகம் விரும்பப்பட்ட டி-சர்ட் இது. இந்த வகை பொருட்களிலேயே அதிக தொகைக்கு ஏலம்போன பொருள் என்கிற பெருமையையும் இந்த டி-சர்ட் பெறுகிறது" என அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1986 FIFA உலகக் கோப்பை யாராலும் மறக்கமுடியாதது. இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் டியாகோ மரடோனா ஒற்றை ஆளாக இரண்டு கோல்களை அடிக்கிறார். அதிக தூரம் கால்பந்தைத் துரத்தி வந்து அவர் அடித்த திசையில் பந்து சென்று போஸ்டில் விழுகிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல உலக ரசிகர்களே கொண்டாடிய 'மாஸ்டர்பீஸ்' கோல் அது. அதில் கடவுளின் பங்கும் இருக்கிறது என்பதால் `கடவுளின் கை' என விமர்சிக்கப்படும் அளவுக்கு அந்த கோல் நினைவுகூரப்படுகிறது.

மரடோனாவிடம் மேட்சின் போது டி-சர்ட்டை பரிமாறிக் கொண்ட கால்பந்தாட்ட வீரர் Steve Hodge இத்தனை ஆண்டுகளாக அதனைப் பாதுகாத்து வந்தார். 20 ஆண்டுகளாக மான்செஸ்டரில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு இருந்த டி-சர்ட் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. மரடோனாவின் மகள் Dalma இந்த டி-சர்ட் அவர் விளையாட்டின் முதல் பாதியில் பயன்படுத்தியது. இரண்டு கோள்கள் அடிக்கும் போது அணிந்திருந்ததில்லை என சந்தேகத்தை எழுப்பினார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஏல நிறுவனம். இந்த டி-சர்ட் இன்றைக்கு வரலாற்றுப் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism