Published:Updated:

இந்தியருக்கும் உக்ரைன் பெண்ணுக்கும் போர் சூழலில் கல்யாணம்... கடைசி நிமிடத்தில் இந்தியா வந்த பின்னணி!

பிரதீக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியுபோ வரவேற்பு நிகழ்ச்சி ( Ashish Pandey )

உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த பிரதீக் என்பவருக்கும் உக்ரைனைச் சேர்ந்த லியுபோ என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனில் வசிக்கும் அந்நாட்டு குடிமக்கள் உட்பட அனைத்து நாட்டு மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவும் உக்ரைனில் உள்ள இந்தியர்களையும் மாணவர்களையும் இந்தியாவிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வருகையில் படத்தின் காட்சிகளை மிஞ்சுவது போல் இந்தியரும் உக்ரைன் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு பத்திரமாக இந்தியா வந்தடைந்துள்ளனர்.

பிப்ரவரி 23 அன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரதீக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியுபோவும், உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்கு ஒரு நாள் முன்பு உக்ரைனில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக சரியான நேரத்தில் உக்ரைனிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்தடைந்தனர். சரியாக இவர்கள் கிளம்பிய பின்னர்தான், அங்கே போர் உக்கிரம் அடைந்திருக்கிறது.

பிரதீக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியுபோ வரவேற்பு நிகழ்ச்சி
பிரதீக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியுபோ வரவேற்பு நிகழ்ச்சி
Ashish Pandey

ஹைதராபாத்தில் உள்ள சில்கூர் பாலாஜி கோயிலில் தலைமை அர்ச்சகர் சி.எஸ்.ரங்கராஜன் தலைமையில் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய தலைமை தலைமை அர்ச்சகர் ரங்கராஜன், உக்ரைனில் நடைபெறும் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கூறினார். மேலும் இந்தப் போர் உலகளவில் ரத்தக்களரியை ஏற்படுத்தி உள்ளது என்றும் கோவிட்-19 பேரழிவிற்குள்ளான உலகில் இது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

இவர்களின் இந்தத் திருமண நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உக்ரைன் சம்பவங்களை விளக்கும் ஒரு படத்தையே எடுத்துவிடலாம் என்னும் அளவிற்கு இந்த நிகழ்வு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism