அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இயங்கி வரும் பிரபல McDonald's நிறுவன உணவகத்தில் 23 வயதான மேத்யூ வெப் என்ற இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 7 மணியளவில் மைக்கேல் மோர்கன் என்பவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மைக்கேல் மோர்கனின் அம்மா வாங்கிச் சென்ற French Fries சூடாக இல்லாததால், குளிர்ந்த நிலையில் இருந்த உணவை தனக்கு வழங்கியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை அறிந்த அவரது மகன் மோர்கன் இதைப் பற்றி கேட்பதற்காக மெக்டொனால்ட்ஸ் கடைக்கு சென்று அங்கு பணிப்புரியும் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`இதுகுறித்து நீங்கள் மேலாளரிடம் பேசுங்கள்' என்று அங்கு பணிபுரிபவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு French Fries -ஐ வழங்கிய மேத்யூ வெப் உணவகத்திற்கு வெளியே சென்றிருக்கிறார். அப்போது கடுமையான கோபத்தில் இருந்த மோர்கன் கடைக்கு வெளியே சென்று மேத்யூ வெப்பைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மைக்கேல் மோர்கன் கொலை முயற்சி செய்தற்காகவும் மற்றும் துப்பாக்கி வைத்திருந்தற்காகவும் காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மோர்கன் இதற்கு முன்பு பலமுறை இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. French Fries-யை சூடாக பரிமாறவில்லை என்பதற்காக மெக்டொனால்ட்ஸ் கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நியூயார்க்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.