Published:Updated:

Work from home-ல் இருந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்ட அமெரிக்க இளைஞர் - எப்படி?

ஆஸ்டின் வெல்ஸ், சொகுசு கப்பல்
News
ஆஸ்டின் வெல்ஸ், சொகுசு கப்பல்

வேலை பார்த்துக் கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்கச் சொகுசு கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துள்ளார் ஆஸ்டின் வெல்ஸ்.

Work from home-ல் இருந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்ட அமெரிக்க இளைஞர் - எப்படி?

வேலை பார்த்துக் கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்கச் சொகுசு கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துள்ளார் ஆஸ்டின் வெல்ஸ்.

Published:Updated:
ஆஸ்டின் வெல்ஸ், சொகுசு கப்பல்
News
ஆஸ்டின் வெல்ஸ், சொகுசு கப்பல்

மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று செய்திருக்கும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆஸ்டின் வெல்ஸ் 'Work from Home' அடிப்படையில் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் MV Narrative என்ற சொகுசுக் கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றை 3 லட்சம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பு படி 2 கோடியே 48 லட்சம் ரூபாய்) செலுத்தி 12 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

ஆஸ்டின் வெல்ஸ்
ஆஸ்டின் வெல்ஸ்

இது குறித்துப் பேசிய ஆஸ்டின் வெல்ஸ், "என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயம் என்னவென்றால், நான் உலகைச் சுற்றிப் பார்க்கும் போது எனது அன்றாட வழக்கத்தை இடையூறு செய்ய வேண்டியதில்லை. இதற்கு முன் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்றால் லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு, விமானத்தில் ஏறி ஒரு அறையை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இப்போது உடற்பயிற்சி கூடம், மருத்துவர்கள், மளிகைக் கடைகள் என அனைத்தும் என்னுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறது என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். ஆஸ்டின் வெல்ஸ் பயணிக்கும் இந்தக் கப்பலில் 11 விதமான குடியிருப்புகள் உள்ளன.

சொகுசு கப்பல்
சொகுசு கப்பல்

1,970 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள இந்தக் கப்பலில் நான்கு படுக்கையறைகள், ஒரு உணவு உண்ணும் அறை, இரண்டு குளியலறைகள், ஒரு பால்கனி என அனைத்தும் இருக்கின்றன. அந்த சொகுசு கப்பலில் 237 சதுர அடி கொண்ட இடத்தில்தான் ஆஸ்டின் வெல்ஸ் தங்கியிருக்கிறார். குறைந்தது மூன்று வருடங்களாவது அந்தக் கப்பலில் தங்கி உலகைச் சுற்றிவர ஆஸ்டின் திட்டமிட்டுள்ளார்.