Published:Updated:

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கோர்பசேவ் காலமானார்! - உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

மிகைல் கோர்பசேவ் ( ட்விட்டர் )

லெனினின் ரஷ்யப் புரட்சியின் காரணமாக உருவான சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கோர்பசேவ் காலமானார்.

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கோர்பசேவ் காலமானார்! - உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

லெனினின் ரஷ்யப் புரட்சியின் காரணமாக உருவான சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கோர்பசேவ் காலமானார்.

Published:Updated:
மிகைல் கோர்பசேவ் ( ட்விட்டர் )

20-ம் நூற்றாண்டில் லெனின், ஸ்டாலினின் புரட்சியால் உருவான சோவியத் யூனியன் பிரதேசத்தில் 15 நாடுகள் ஒருங்கிணைந்திருந்தன. அப்போது உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் யூனியன் இருந்தது. அதன் பிறகுதான் சோவியத் யூனியனிலிருந்து மற்ற நாடுகள் பிரிந்தன. இப்போது இருக்கும் ரஷ்ய நாடுகளின் கூட்டமைப்பு என்பது சோவியத் யூனியனின் சிதைவிலிருந்து உருவானது.

மிகைல் கோர்பச்சேவ்
மிகைல் கோர்பச்சேவ்
ட்விட்டர்

பிரிவதற்கு முன்பு வல்லரசு நாடான சோவியத் யூனியனின் அதிபராக 1985-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் மிகைல் கோர்பசேவ் (Mikhail Gorbachev). இவர் ஆட்சியின்போதுதான் சோவியத் யூனியனில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.

சோனியா காந்தி, ராஜீவ் காந்தியுடன் மிகைல் கோர்பசேவ்
சோனியா காந்தி, ராஜீவ் காந்தியுடன் மிகைல் கோர்பசேவ்
ட்விட்டர்

அதேபோல, சோவியத் யூனியனிலிருந்து மற்ற நாடுகள் பிரிந்துபோவதை அவர் அனுமதித்தார். அதன் காரணமாகவே 1991-ம் ஆண்டு 15 நாடுகள் பிரிந்து தனித்தனி சுதந்திர நாடுகளாக மாறின. இத்தகைய நடவடிக்கைகளுக்காக 1990-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் மிகைல் கோர்பசேவ். 91 வயதான இவர் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இறந்துவிட்டதாக ரஷ்யப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கோர்பசேவ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.