ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், ரஷ்ய கடுமையான தாக்குதலை உக்ரைன் தலைநகர் கீவில் நடத்திவருகிறது. கடுமையான இந்தச் சூழலிலும் கூட மனிதம் தோற்காமல், உக்ரைன் மக்களுக்கும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் பலர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள எல்லை சோதனைச் சாவடியில் உக்ரைனைச் சேர்ந்த இராணுவ வீரர்களான வலேரி ஃபைலிமோனோவ் மற்றும் லெசியா இவாஷ்செங்கோ ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வழக்கமான திருமண உடையில் இல்லமால் இராணுவ உடையில் இருவரும் பூங்கொத்துகள் கொடுத்த வண்ணம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்தத் திருமணத்தை இருவரின் நண்பர்கள், சக இராணுவ வீரர்கள் மற்றும் மேயர் விட்டலி கிளிச்ட்கோ ஆகியோர் உடன் இருந்து நடத்தி தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தற்போது இந்த திருமணத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
