Published:Updated:

ஜெர்மனி: 8 நாள்களாக சாக்கடைக்குள் சிக்கித் தவித்த 8 வயது சிறுவன்... மீட்கப்பட்டது எப்படி?

சிறுவன் ( மாதிரிபடம் )

ஜெர்மனியில் 8 வயது சிறுவன் காணாமல்போன எட்டு நாள்களுக்குப் பிறகு சாக்கடையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜோ என்று அறியப்படும் அந்த 8 வயது சிறுவன், ஜூன் 17-ம் தேதியன்று தனது வீட்டுத்தோட்டத்திலிருந்து காணாமல்போயிருக்கிறான். அதைத் தொடர்ந்து சிறுவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிர தேடுதலில் இருந்திருக்கின்றனர். பின்னர் ஜூன் 25-ம் தேதி அந்தப் பகுதியின் சாலையில் ஒருவர் சென்றுகொண்டிருக்கையில், சாக்கடை மூடியருகே ஏதோ முணுமுணுக்கும் சத்தம் கேட்க, தேடிப்பார்த்ததில் அந்தச் சாக்கடையில் சிறுவன் இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஜெர்மனி போலீஸ்
ஜெர்மனி போலீஸ்

இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு வீரர்களும், மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதன் பின்னர் உடனடியாக மழைநீர் வடிகால் சாக்கடைக்குச் செல்லும் அந்தச் சாக்கடையின் மேன்ஹோல் மூடியைத் தூக்கி, தீயணைப்பு வீரர்கள் சாக்கடையிலிருந்து சிறுவனை உயிருடன் மீட்டனர். பின்னர் சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இதில் சிறுவன் மீட்கப்பட்ட சாக்கடை, அவரது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்திருக்கிறது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கிளாட், ``ஜோ-வுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுவன்
சிறுவன்
மாதிரிப் புகைப்படம்

பொதுமக்களின் உதவியால் ஜோவைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதற்குப் பொதுமக்களுக்கு நன்றி. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜோ உயிருடன் இருக்கிறார். நாம் அனைவரும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சிறுவன் எப்படி சாக்கடைக்குள் சிக்கினான் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" எனக் கூறினார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.