Published:Updated:

`நான் மகிழ்ச்சியாக இல்லை'- 12 வருடத்தில் 40 சர்ஜரிகள்; நடிகையைப்போல மாற ரூ.4.7 கோடி செலவளித்த மாடல்!

ஜெனிபர் பாம்ப்லோனா

வெர்சேஸ் பிராண்டின் மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா (Jennifer Pamplona), கிம் கர்தாஷியன் தோற்றத்தில் தன்னை மாற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 4.7 கோடி செலவழித்திருக்கிறார்.

`நான் மகிழ்ச்சியாக இல்லை'- 12 வருடத்தில் 40 சர்ஜரிகள்; நடிகையைப்போல மாற ரூ.4.7 கோடி செலவளித்த மாடல்!

வெர்சேஸ் பிராண்டின் மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா (Jennifer Pamplona), கிம் கர்தாஷியன் தோற்றத்தில் தன்னை மாற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 4.7 கோடி செலவழித்திருக்கிறார்.

Published:Updated:
ஜெனிபர் பாம்ப்லோனா

சோசியலைட், தொழிலதிபர், நடிகை மற்றும் மாடல் என பிரபலமாக இருக்கும் 'கிம் கர்தாஷியன்' போல தனது தோற்றத்தை மாற்ற 12 வருடத்தில் சுமார் 40 சர்ஜரிகளை செய்து கொண்டிருக்கிறார் வெர்சேஸ் பிராண்டின் மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா. முதன்முறையாக கர்தாஷியன் போல தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்தபோது பாம்ப்லோனாவுக்கு வயது 17 தான். கிம் கர்தாஷியன் போல உருமாற்றம் செய்ததன் மூலம் சர்வதேச கவனத்தை விரைவாக ஈர்த்த அவர் டெய்லி மெயில் மற்றும் தி சன் ஆகிய பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் இவரைப் பின்தொடர்கின்றனர். ஆனால் மகிழ்ச்சி இவரை பின்தொடரவில்லை."மக்கள் என்னை கர்தாஷியன் என்று அழைப்பது தற்போது எனக்கு எரிச்சலூட்டுகிறது. நான் வேலை செய்து படித்தேன், ஒரு தொழிலதிபராக இருந்திருக்கிறேன்.

 ஜெனிபர் பாம்ப்லோனா
ஜெனிபர் பாம்ப்லோனா

எனது தனிப்படட வாழ்க்கையில் எவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும் ஒரு கர்தாஷியனைப் போல இருந்ததால் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன்" என்று கேட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். மேலும், அறுவை சிகிச்சைக்கு அடிமையாகி விட்டதாகவும், தான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் தெரிவித்த பாம்ப்லோனா தற்போது தன் பழைய தோற்றத்திற்கு மாற விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். கிம் கர்தாஷியன் தோற்றத்தில் தன்னை மாற்றிக் கொள்ள கிட்டத்தட்ட ரூ.4.7 கோடி செலவழித்த இவர் தற்பொழுது மீண்டும் தன்னை பழைய தோற்றத்திற்கு மாற்ற 95 லட்சம் செலவழித்திருக்கிறார்.