Published:Updated:

பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்து... குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தான் ( ட்விட்டர் )

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்டு விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவிலிருந்து சோப் நகருக்கு ஒரு வேன் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அக்தா் சாய் என்ற மலைப்பகுதியில் வேன் வளைவில் திரும்பும்போது டிரைவாின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் இறந்துவிட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய உள்ளூர் அதிகாரி ஒருவர், ``அக்தர்சாய் அருகே மலை உச்சியிலிருந்து அந்த வாகனம் விழுந்தது. மலைகளில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கு காரணமாக மீட்புப் பணிகள் கடினமாக இருப்பதால் இதுவரை 10 உடல்களை மீட்டிருக்கிறோம். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சுகிறோம். தொடர்ந்து முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்
ட்விட்டர்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி விபத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism