Published:Updated:

100 வருடங்களாகக் காணாமல் போன அந்துப்பூச்சி இனம்; விமான நிலைய சோதனையில் மீட்பு!

அந்துப்பூச்சி ( NY Times )

"இது 1912-ல் ஸ்ரீலங்காவில் காணப்பட்ட பூச்சியினம். அதன் பிறகு எங்குமே தென்படவில்லை. மெழுகுப் பூச்சிகள் என்று சொல்லப்படுகிற அந்துப்பூச்சிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை இவை"

100 வருடங்களாகக் காணாமல் போன அந்துப்பூச்சி இனம்; விமான நிலைய சோதனையில் மீட்பு!

"இது 1912-ல் ஸ்ரீலங்காவில் காணப்பட்ட பூச்சியினம். அதன் பிறகு எங்குமே தென்படவில்லை. மெழுகுப் பூச்சிகள் என்று சொல்லப்படுகிற அந்துப்பூச்சிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை இவை"

Published:Updated:
அந்துப்பூச்சி ( NY Times )

கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் ஆங்காங்கு புள்ளிகளுடன், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பான வானம்போல காணப்படும் இந்தப் அந்துப்பூச்சி 1912-க்கு பிறகு இப்போது தான் முதன்முறையாக கண்டறியப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் ஆய்வாளர்கள்.

அந்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் போன்றே இருக்கும். இவற்றை இரவு நேரத்தில் காண முடியும். இவற்றில் நன்மை பயப்பவை, தீமை பயப்பவை என்கிற வகைகளும் உண்டு.

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் விமான நிலையத்தில், 2021 செப்டம்பர் பிலிப்பைன்ஸில் இருந்த வந்த பயணி ஒருவர் கொண்டு வந்த விதைகள் இருந்த பாட்டிலில் ஒரு கூட்டுப்புழு இருந்தது. அந்த விதைகளை அவர் மருத்துவ குணமிக்க தேநீர் தயாரிக்க கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

விதை துளைகளில் காணப்பட்ட கூட்டுப்புழு
விதை துளைகளில் காணப்பட்ட கூட்டுப்புழு

அதன் மீதான ஆர்வத்தால் பூச்சியியல் ஆய்வாளர்களுக்கு அந்த கூட்டுப்புழுவை அனுப்பி வைத்தனர் அதிகாரிகள். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர் எம்.அல்மா சோலிஸ், "இது 1912-ல் ஸ்ரீலங்காவில் காணப்பட்ட பூச்சியினம். அதன் பிறகு எங்குமே தென்படவில்லை. மெழுகுப் பூச்சிகள் (Pyralidae) என்று சொல்லப்படுகிற அந்துப்பூச்சிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை இவை. இவற்றால் ஏற்கெனவே அமெரிக்காவில் நிலவி வரும் இயற்கை வாழ்வியல் சூழல் பாதிக்கப்பட வாய்ப்புண்டு" எனத் தெரிவிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"Spongy Moth எனச் சொல்லப்படுகிற அந்துப்பூச்சிகள் மரங்களை அரிக்கக்கூடியவை. இவற்றால் வருடந்தோறும் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக அமெரிக்காவின் பூச்சியியல் அமைப்பு தெரிவிக்கிறது. அதுபோல இந்த அந்துப்பூச்சியும் இயற்கை சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டு" எனவும் சொல்கிறார்கள்.

"நுழைவு அதிகாரிகளுக்கு விலங்கியல் சார்ந்த அறிவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் வளங்களைப் பாதிக்க யாரேனும் திட்டமிட்டே இதுபோன்ற உயிரினங்களை கொண்டுவர முயன்றாலும் தடுக்கமுடியும்" என எச்சரிக்கிறார்கள் ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism