Published:Updated:

`கடவுள் இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று நினைக்கவேயில்லை’ - 16 குழந்தைகளைப் பெற்ற தாய் மீண்டும் கர்ப்பம்

கர்ப்பிணி

``நாங்கள் எப்போதுமே ஒரு பெரிய குடும்பத்தைத்தான் விரும்புகிறோம். ஆனால் கடவுள் எங்களை இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.”

நம் ஊரில் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, பொதுவாகவே பெரியவர்களெல்லாம் `16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்தவது வழக்கமான ஒன்று. அதற்கான உண்மையான அர்த்தம் வேறு என்றாலும்கூட, சும்மா விளையாட்டுக்காக `16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்’ எனச் சொல்வதும் உண்டு. ஆனால் ஒரு தம்பதி 16 குழந்தைகளைப் பெற்றெடுத்து, 17-வது குழந்தையைப் பெற்றெடுக்கவே தயாராகிவிட்டார். இதை படிக்கும்போது உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா... யார் அவர் என்று பார்ப்போம்.

`கடவுள் இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று நினைக்கவேயில்லை’ - 16 குழந்தைகளைப் பெற்ற தாய் மீண்டும் கர்ப்பம்
Patty Hernandez

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், தன் கணவருடன் வசித்துவருபவர் பேட்டி ஹெர்னாண்டஸ் (Patty Hernandez). 40 வயதாகும் இவர், இந்த ஆண்டு மே மாதத்தில்தான் தன் 16-வது குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த நிலையில் தற்போது 17-வது குழந்தையைப் பெற்றெடுக்க கர்ப்பமாகியிருக்கிறார்.

இது குறித்து ஊடகத்திடம் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்த பேட்டி ஹெர்னாண்டஸ், ``14 ஆண்டுகளாக நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்து 13 வாரங்கள் ஆகின்றன.

கர்ப்பம்
கர்ப்பம்
சித்தரிப்புப் படம்

இப்போது, 17-வது குழந்தையைப் பெற்றெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதில், நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். நாங்கள் எப்போதுமே ஒரு பெரிய குடும்பத்தைத்தான் விரும்புகிறோம். ஆனால் கடவுள் எங்களை இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. மேலும் அதுதான் கடவுளின் விருப்பமென்றால், அவரிடம் 18-வது குழந்தையையும் கேட்போம். அதோடு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தால் கார்ட்டர் (Carter) என்றும், பெண்ணாக இருந்தால் க்ளேர் (Clair) என்றும் பெயர்வைக்கலாம் என்று யோசித்துவருகிறோம்" எனக் கூறினார்.