Published:Updated:

"இலங்கை பொருளாதார நெருக்கடிக்குக்குக் காரணம் இதுதான்!"- மனம் திறக்கும் முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சூழ்நிலையை சரிசெய்வது குறித்துப் பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

"இலங்கை பொருளாதார நெருக்கடிக்குக்குக் காரணம் இதுதான்!"- மனம் திறக்கும் முத்தையா முரளிதரன்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சூழ்நிலையை சரிசெய்வது குறித்துப் பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

Published:Updated:
முத்தையா முரளிதரன்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடிகளால் தவித்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்து சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. மின்சாரத் தட்டுப்பாட்டால் நாளொன்றுக்கு சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் நெருக்கடி சூழல் அதிகரித்துக் கொண்டிருக்க மக்கள் அரசுக்கெதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் இந்தச் சூழ்நிலையை சமாளிக்க சக்தி வாய்ந்த அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தங்கள் இனம், மதம், கட்சி ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இது பற்றிக் கூறிய அவர்,

"இந்த நெருக்கடிக்குப் பல காரணங்கள் உள்ளன. கூட்டாக அனைத்தும் சேர்ந்துதான் இதற்குக் காரணமாகியுள்ளன. ஒருநாளில் இத்தகைய நிலை ஏற்பட்டு விடவில்லை. பெருந்தொற்று காலம், வேலைகள் பறிபோயின. பெட்ரோல், டீசல் விலைகளின் அதிகரிப்பு மட்டுமின்றி நிச்சயம் நிர்வாக மோசடிகளும் காரணம். ஆனால் அதே சமயம் மோசடிக்கு நிர்வாகம் மட்டுமே காரணம் என்று குற்றம் சாட்டிவிட முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் அண்டை நாடாடுகளான இந்தியா, சீனா உதவி புரிய வேண்டும். பன்னாட்டு நிதியமைப்பு இந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறான உதவியைச் செய்ய வேண்டும். இலங்கை ஒரு சிறிய நாடு, இங்கு இறக்குமதிகள்தான் அதிகம், ஏற்றுமதிகள் குறைவு. அதனால் டாலர்களுக்கான நெருக்கடி முதலில் வந்தது. நிறைய பொருள்களை நாங்கள் இறக்குமதிதான் செய்ய நேர்ந்தது. இப்போது சரக்குக் கட்டணங்களும் கடுமையாக அதிகரித்துள்ளன.

முரளிதரன்
முரளிதரன்

அதாவது 100 டாலரில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு இன்று 700 டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எரிசக்தி பில்கள் எகிறின. ஒரு நாளில் இதெல்லாம் வந்து விடவில்லை, இது தொடர்ச்சியாக தவறுகள் நடந்து கொண்டே இருந்ததன் விளைவு" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism