Published:Updated:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு காலக்கெடு விதித்திருக்கும் நான்சி பெலோசி யார்?

Trump, Nancy Pelosi
News
Trump, Nancy Pelosi

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது அரசியல் குற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார் அமெரிக்க பாராளுமன்ற அவை சபாநாயகர் நான்சி பெலோசி.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல், வரும் 2020-ம் வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது அரசியல் குற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார் அமெரிக்க பாராளுமன்ற அவை சபாநாயகர் நான்சி பெலோசி.

அமெரிக்க அதிபர் ஒருவர் மீது அரசியல் அத்துமீறல் குற்றச்சாட்டு கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறை. 1972 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டார் என்கிற அடிப்படையில் அப்போதைய அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் மீது இப்படியானதொரு தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது. ஆனால், அதற்கு முன்பே தனது தவற்றை ஒப்புக்கொண்டு நிக்ஸன் பதவி விலகினார்.

தற்போது அதிபர் மீது இந்த அரசியல் குற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இருவருமே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, அந்நாட்டு அதிபர் விலாடிமிர் செலன்ஸ்கியை அழைத்து வாழ்த்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப், தனக்காக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மகனை உக்ரைன் உளவாளிகளைக் கொண்டு வேவு பார்க்கச் சொன்னதாகவும், அதற்கு அமெரிக்க அரசு வழக்கறிஞரிடம் பேசும்படியும் செலன்ஸ்கியை நிர்பந்தித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த தொலைபேசி உரையாடல் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில்தான் நான்சி பெலோசி, அவர்மீதான தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு எதிராக இப்படியொரு நடவடிக்கையைத் துணிந்து எடுக்க தைரியம் வேண்டுமென அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

யார் இந்த நான்சி பெலோசி!

Nancy Pelosi
Nancy Pelosi

அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக நான்சி பதவியேற்றிருப்பது இது இரண்டாவது முறை. சபாநாயகராக இரண்டாவது முறை பதவியேற்றிருக்கும் ஒரே உறுப்பினர், அமெரிக்க அரசியலமைப்பின் உயர்பதவியில் இருக்கும் ஒரே பெண் உறுப்பினர் உள்ளிட்ட பல பெருமை இவருக்குண்டு. எலினார் ரூஸ்வேல்ட், ஹிலாரி கிளிண்டன், மிஷல் ஒபாமா, மெலானியா ட்ரம்ப் என வெள்ளை மாளிகையின் முதல்பெண்களை மட்டுமே அறிந்த உலகத்துக்கு, நான்சி பெலோசி அறியாத முகம்தான். பெலோசி அமெரிக்காவின் இராக் கொள்கையை எதிர்த்தவர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஹெல்த் கேர் திட்டத்தின் முன் நபராக இருந்து வழிநடத்தியவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெறுவதற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியபோது அதை எதிர்த்தவர். ட்ரம்ப்பின் தூய்மை வாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி வருபவர். பெண்ணியவாதி. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ட்ரம்ப் ரஷ்யாவின் உதவியை நாடினார் என்கிற குற்றச்சாட்டை அமெரிக்கப் பாராளுமன்ற அவையில் முன்வைத்தவர். எதையும் துணிந்து முன்னெடுக்கும் பெலோசிதான் தற்போது அரசியல் குற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார்.

Obama, Nancy Pelosi
Obama, Nancy Pelosi
ட்ரம்ப்பின் யதேச்சதிகாரத்தை எவருமே எதிர்த்துக் குரலெழுப்ப முடியாமல் இருந்த நிலையில், அதிகாரத்தில் இருக்கும் வலுவான பெண்ணாக நான்சி பெலோசி சாதித்துக்காட்டியுள்ளார்

மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தாலும், உரையாடல் ஆதாரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் வரைக் காத்திருந்து தற்போது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார் பெலோசி. இடைப்பட்ட காலத்தில் பெலோசியின் சக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே , ``நான்சி பெலோசியின் நடவடிக்கை பொறுமை இழக்கச் செய்வதாக இருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார்கள்.

தற்போது அதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள நான்சி, ``பதவியில் இருக்கும் ஓர் அதிபரின் மீது அரசியல் குற்றத் தீர்மானத்தைக் கொண்டுவருவது அத்தனை எளிதான காரியமல்ல. நமது அம்பு நம்மை நோக்கித் திரும்ப வாய்ப்புகள் அதிகம். அதனால் எச்சரிக்கை உணர்வுடனே இதில் செயல்பட வேண்டியிருக்கிறது.

Trump, Nancy Pelosi
Trump, Nancy Pelosi

இனிமேல் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து ட்ரம்ப் தப்பிக்க வாய்ப்பில்லை. நிக்ஸனி வாட்டர் கேட் முறைகேடுக்குச் சற்றும் குறைவில்லாதது ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை. இன்னும் சொல்லப்போனால் நிக்ஸனைவிடப் பெரும் சுயநலவாதி ட்ரம்ப். தனது சுயலாபத்துக்காக வெளிநாட்டுத் தொடர்புகளுடன் அரசியல் ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்வது ட்ரம்ப்புக்கு மட்டுமே சாத்தியம்” என்று சராமரியாக வெடித்துள்ளார் நான்சி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனால் பதவியிழக்கக் கூடும். மேலும் நீதிமன்றத்தில் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். அதிபர் ட்ரம்ப்பின் யதேச்சதிகாரத்தை எவருமே எதிர்த்துக் குரலெழுப்ப முடியாமல் இருந்த நிலையில், அதிகாரத்தில் இருக்கும் வலுவான பெண்ணாக நான்சி பெலோசி சாதித்துக்காட்டியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் அவரைப் பாராட்டி வருகின்றன.