விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது நிலவில் சேகரிக்கப்பட்ட நிலவின் பாறைகள் பூமிக்கு எடுத்துவரப்பட்டன. இந்தப் பாறைகளின் தூசிகளில் பூமியில் உள்ள உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வேற்று கிரக நோய்க்கிருமிகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட சுமார் 40 மில்லிகிராம் நிலவின் தூசி மற்றும் மூன்று கரப்பான் பூச்சி சடலங்கள் அடங்கிய ஒரு குப்பியை உள்ளடக்கிய சோதனையின் பொருட்கள் தற்போது ஏலத்தில் விற்கப்படும் என்று கூறப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஏலம் குறைந்தபட்சம் 400,000 அமெரிக்க டாலர்கள் வரை செல்லும் என்று எதிரிபார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் பொருட்களை ஏலத்தில் விற்க அனுமதி வழங்கப்படவில்லை என்று ஏலத்தை நிறுத்தியுள்ளது நாசா. இது பற்றி நாசா எழுதியிருந்த கடிதத்தில், "இந்தப் பொருட்களின் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அப்பல்லோ 11 மாதிரிகளும் நாசாவிற்குச் சொந்தமானது. இதன் பகுப்பாய்வு, அழிப்பு அல்லது பிற பயன்பாட்டிற்குப் பிறகு, இந்தப் பொருட்களை விற்பனை அல்லது தனிப்பட்ட காட்சிக்கு பயன்படுத்த எந்த தனிப்பட்ட நபருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் அல்லது பிற நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே அப்பல்லோ 11 மேற்கொண்ட நிலவின் மண் பரிசோதனையில் இருந்த பொருட்களான கரப்பான் பூச்சிகள், நிலவின் தூசி, மற்றும் அழிவுக்குப் பிந்தைய சோதனை மாதிரி செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் ஏலச் செயல்முறையும் நிறுத்தப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.